ச்சே, இது என்ன கண்றாவி… அமீர்கான் மகளை திருமணம் செய்ய டவுசர் பனியனோடு மேடை ஏறிய மருமகன் நுபுர்

நடிகர் அமீர்கான் இந்தி படவுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்கிறார். அவருடன் அவரது அம்மா இருக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில், அமீர்கான் குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டதால் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் பத்திரமாக படகில் மீட்கப்பட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்திய திரையுலகில் முதன்முறையாக மிக அதிகளவில் வசூல் மழை பொழிந்த படமாக இருந்தது அமீர்கான் நடித்த தங்கல் படம்தான். இந்த படம் எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. லால் சிங் தத்தா என்ற அமீர்கான் நடித்த சமீபத்திய படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் தோல்விப்படமாக அமைந்தது.

அதற்கு முக்கிய காரணம் பாய்காட் பாலிவுட் என்று இந்தி ரசிகர்கள், பாலிவுட் படங்களை புறக்கணித்த நேரத்தில் அந்த படம் ரிலீஸ் ஆனதுதான். என்றாலும், அதற்காக பெரிய அளவில் வருந்தாமல், அந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அழைத்து, இந்த படத்தின் தோல்விக்கு நானே காரணம் என, பார்ட்டி கொடுத்த பண்பாளர் அமீர்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் மற்றும் அவரது முன்னால் மனைவி ரீனா தத் ஆகியோரின் மகள் இரா கான். இவருக்கும் உடற்பயிற்சியாளராக நுபுர் ஷிக்காரேவுக்கும் நேற்று திருமணம் நடந்தது. அப்போது அவர் மாப்பிள்ளை உடை அணியாமல், உடற்பயிற்சி செய்யும் போது, ஓடும்போது அணியும் விதமான பனியன் டவுசரில் வீட்டில் இருந்து திருமண மண்டபத்துக்கு 8 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்திருக்கிறார். பின்னர் அதே ஆடையில், மேடை ஏறிய நிலையில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அந்த வீடியோ, புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

இப்படி ஒரு வித்யாசமான கெட்டப்பில் மாப்பிள்ளை மேடை ஏறுவதை பார்த்து, திருமணத்துக்கு வந்திருந்த பலரும், ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்த விழாவில் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ரா பங்கேற்ற நிலையில், அவருக்கு அமீர்கான் முத்தம் கொடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *