அஜீத் வேறு கிரகத்தில் வாழ்கிறார், அவருக்கு தமிழ்நாட்டில் யாரையும் தெரியாது – விளாசித் தள்ளிய இயக்குநர்..!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஜர்பைஜான் சென்ற அஜீத்குமார் சென்னை திரும்பி நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரைக்கும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதே போல், விஜயகாந்த் வீட்டுக்கும் சென்று, அவரது குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிக்கவில்லை. அஜீத்குமாரின் இந்த அநாகரிகமாக பண்பை கண்டு தமிழ் சினிமா துறையினர் பலரும் முகம் சுளிக்கின்றனர்.

விஜயகாந்த் சாதாரண மனிதர் அல்ல. மிகச்சிறந்த மனிதநேய பண்பாளர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர். தேமுதிக என்ற அரசியல் கட்சிக்கு தலைவராக, தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்தவர். மறைந்த பின்பும் இன்னும் மக்கள் மனங்களில் வாழும் அளவுக்கு பல நல்ல செயல்களை செய்தவர். மங்காத புகழுக்கு சொந்தக்காரர்.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதருக்கு நேரில் அஞ்சலி செலுத்தா விட்டாலும், ஒரு நான்குவரி இரங்கல் செய்தி அனுப்பியிருந்தால் கூட அது மிகப்பெரிய மரியாதையாக இருந்திருக்கும். அப்படி செய்யாததால் இப்போது அஜீத்குமார்தான் அசிங்கப்பட்டவராக இருக்கிறார். இதுகுறித்து திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் தங்கர்பச்சான் அஜீத்குமாரை மிக கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

நீங்கள் அஜீத்குமாரிடம் சென்று தங்கர்பச்சான் குறித்து கேளுங்கள். அவருக்கு தெரியாது. என்னை மட்டுமல்ல. வேறு யாரையும் அவருக்கு தெரியவே தெரியாது. ஏனென்றால் அவர் வேறு ஒரு கிரகத்தில் இருக்கிறார். வேறு ஒரு கோளில் அவர் வாழ்கிறார்.

தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மாட்டார். பணம் கொடுத்து, உடல் உழைப்பை கொடுத்து எத்தனையோ பேர் வந்து அவர் நடித்த படத்தை பார்க்கின்றனர். அந்த ரசிகர்களையும் அவர் பார்ப்பது இல்லை. அவர் ராஜ வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். அதை கொடுத்தது உழைக்கும் மக்கள்தான். ஆனால் அவர்கள் யாரும் அவருக்கு வேண்டாம். கோடி கோடியாக வாங்க மட்டும் வேண்டும். இது மட்டும்தான் அவரது குறிக்கோள் என்று கூறியிருக்கிறார் தங்கர்பச்சான்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *