5 மனைவிகள்.. கெத்தான வாழ்க்கை.. நடிகர் எம்.ஆர்.ராதா கடைசியில் எப்படி இறந்தார் தெரியுமா..?

திரை உலகில் நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது கரகரப்பான குரலால் பேமஸான நடிகராக திகழ்ந்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் மேடைகளில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும், வில்லன் கேரக்டர்களிலும் அசத்தியவர்.

இவரின் நிஜ வாழ்க்கையில் இவருக்கு ஐந்து மனைவிகள் இருந்து இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் அது உண்மைதான். இவர் இந்த ஐந்து மனைவிகளோடும் கெத்தாய் வாழ்ந்து காட்டியவர.

எம்.ஆர்.ராதாவின் இயற்பெயர் மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதாகும். இதன் சுருக்கத்தை தான் எம்.ஆர்.ராதா என்று மாற்றிக் கொண்டார். எம்.ஆர்.ராதாவிற்கு தமிழரசன், எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராணி, செல்வராணி, ரதிகலா, ராதிகா, நிரோஷா, மோகன் ராதா எனும் பிள்ளைகள் இருந்தார்கள்.

இதில் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா போன்ற பிள்ளைகள் திரைப்படத்துறையில் நடித்திருக்கிறார்கள். மேலும் மோகன் ராதா தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.

திரைத் துறையிலும் அரசியலிலும் ஜாம்பவானாக திகழ்ந்த எம்ஜிஆரை 1967-ஆம் ஆண்டு அவரது ராமாவரம் வீட்டில் எம்.ஆர்.ராதா சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டார். இதனை அடுத்து இதற்கு தண்டனையைப் பெற்ற அவர் சிறையில் நாட்களை எண்ணினார்.

மேலும் 1968 – ஆம் ஆண்டு திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடோடு எம்.ஆர். ராதாவிற்கு ஜாமீன் கிடைத்தது. இதனை அடுத்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்திய எம்.ஆர்.ராதா தூக்கு மேடை, ரத்தக்கண்ணீர், கொலை வழக்கு போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பாவ மன்னிப்பு, ரத்தக்கண்ணீர், பாத காணிக்கை, பட்டினத்தார் போன்ற வேறுபட்ட கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்பட்டு அவரது அவர் நடிப்பை பார்த்து பலரும் நடிப்பை கற்றுக் கொண்டார்கள்.

சினிமா துறையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு யாருக்கும் தலை வணங்காத வணங்க முடியாய் வாழ்ந்து வந்த எம்.ஆர் ராதா எம்ஜிஆரை சுட்ட பிறகு அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இதனை அடுத்து பல நாடுகளுக்கு சென்று நாடகங்களை நடத்தி வெற்றிகரமாக வாழ்ந்து வந்த எம்.ஆர்.ராதா சிங்கப்பூர், மலேசியாவில் நாடகங்களை நடத்தக்கூடிய காலத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து திருச்சி திரும்பிய இவர் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். எம்.ஆர்.ராதாவின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர்  கலந்து கொள்ளவில்லை. எம்ஜிஆரின் பாதுகாப்பை கருதி எம்.ஆர்.ராதா குடும்பத்தினர் அவரை வரவேண்டாம் என்று கூறியதோடு அரசு மரியாதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam