“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குநராக இருந்தவர். 1980, 1990களில் இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளிவந்தன. இவருக்கு புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியும் உண்டு. ஏனெனில் அரசியல், சட்டம், சமூகம் சார்ந்த பிரச்னைகளை கேள்வி எழுப்பும் கதைக்கருவாக இவரது படங்கள் இருந்தது.

எஸ்ஏ சந்திரசேகரின் பல படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார், விஜயகாந்த் பல இயக்குநர்களின் பல படங்களில் நடித்திருந்தாலும், தனது டைரக்டர் என குறிப்பிடுவது எஸ்ஏ சந்திரசேகரை மட்டும்தான். தனது சினிமா பயணத்தில் எஸ்ஏ சந்திரசேகருக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதால் நடிகர், இயக்குநர் என்ற நிலை தாண்டிய ஒரு நெருக்கமான நட்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது.

சமீபத்தில் விஜயகாந்த் மறைவு குறித்து ஒரு நேர்காணலில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், மிகவும் வருத்தப்பட்டார். அவரை விட 12 வயது மூத்தவன் நான் இருக்கிறேன். ஆனால் விஜயகாந்த் இறந்துவிட்டார். அவரது உயிரற்ற உடலை பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லை. அதனால், அதை நான் தவிர்த்தேன் என்றும் கூறினார்.

அப்போது நேர்காணல் செய்தவர் விஜய் பெயரை குறிப்பிட்டு எதுவோ கேட்க வர சட்டென்று எஸ்ஏ சந்திரசேகர் கடுப்பானார். விஜயகாந்த் பற்றி பேசும்போது, விஜயை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க, என கோபமாக அவரிடம் கேட்டார். விஜய் அவரது மறைவுக்கு சென்ற போது, கண்கலங்கியபடி அங்கு சில நிமிடங்கள் நின்றாரே அதுபற்றிதான் கேட்க வந்தேன் என்று கேள்வியாளர் சமாளித்தார்.

உடனே கூலான எஸ்ஏ சந்திரசகேர், ஆமாம், அதுதான் நன்றி விசுவாசத்தின் வெளிப்பாடு. நாம இந்த இடத்துக்கு வர முக்கிய காரணங்களில் ஒருவராக அவரும் இருந்தாரே, என்று நினைத்தால் கண்ணீர் வந்து அப்படி அஞ்சலி செலுத்த வைத்தது, என்று கூறினார் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர். விஜயின் ஆரம்பகால வளர்ச்சிக்காக செந்தூரபாண்டி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்து, விஜயை தனது தம்பியாக நடிக்க வைத்தது விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam