எப்படி இருந்த இவரு.. இப்படி ஆயிட்டாரு.. என்று கேட்டு தூண்டக்கூடிய வகையில் தற்போது ரோபோ ஷங்கரின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த அதிரடியான தகவல்களை திரை விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேட்டியில் அவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெமினி கணேசன் குறித்து பேசி இருந்தார். மது அருந்தக்கூடிய பழக்கம் கொண்ட இவர்கள் தனது உடல் நிலையை பாதுகாப்பதற்காக உரிய உணவு பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் தினமும் செய்து வாழ்ந்த நிலையில் தான் அவர்கள் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள்.
மேலும் எந்த விதமான ரசாயனம் கலந்த மேக்கப் சாமான்களை அவர்கள் பயன்படுத்தி நடித்தது கிடையாது. இவர்கள் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மேக்கப் சாமான்களை தான் அதிகளவில் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
ரோபோ ஷங்கர் பற்றி இவர் பேசுகையில் விஜய் டிவியில் அதிகமான வாய்ப்புகள் ரோபோ ஷங்கருக்கு கிடைத்ததின் மூலம் வருமானம் அதிகரித்தது. இதனையடுத்து தீய பழக்க வழக்கங்கள் அவருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக இரவு நேரத்தில் மதுவில்லாமல் உறக்கமே ஏற்படாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ரோபோ ஷங்கர், பொது இடங்களிலும் அதிக அளவு மது பருகுவதை பலரும் பார்த்திருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்நிலையில் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் ரோபோ ஷங்கரின் உடல் எடை மிகவும் குறைவானதை அடுத்து அவரது மனைவி பிரியங்கா திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதின் காரணத்தினால் தான் உடல் எடையை குறைத்து விட்டார் என்று மழுப்பிப் பேசினார்.
எனினும் ரோபோ சங்கரின் நண்பர் உள்ளதை உள்ளபடி கூறியதை அடுத்து சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இருந்தது தெரிந்தது. அத்துடன் தொடர்ந்து குடித்து வந்த தன் காரணத்தால் தான் உடல் இளைத்து விட்ட என்ற உண்மை பரவியது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததை அடுத்து பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டார். அது தான் அவர் உடல் எடை குறைவுக்கு காரணம் என்று பயில்வான் ஓபனாக உடைத்து விட்டார். அத்தோடு அதிகம் குடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக அளவு அசைவ உணவுகளை உண்டதின் மூலம் தான் இத்தகைய நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டது என்ற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.
எனவே இனிமேலாவது திரைபட பிரபலங்கள் இரவு நேர பார்ட்டிகளில் மது அருந்தினால் அது அவர்களோடு இருக்கட்டும் அதை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதின் மூலம் அவரது ரசிகர்களும் அதையே ஃபாலோ செய்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வார்கள். எனவே இதை தவிர்ப்பது நல்லது என்ற சமூக சிந்தனையை விதைக்கக்கூடிய கருத்தையும் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.