திரைப்படத் துறையில் சாதித்து கேப்டன் என்ற அந்தஸ்தை பிடித்த கேப்டன் விஜயகாந்த் அரசியலிலும் சாதித்து முதல்வராக வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்த போது இருந்த உத்வேகம் அவரது உடல் நிலை பின்னடைவு ஏற்பட்ட காரணத்தால் முதல்வர் கனவு தகர்ந்தது என கூறலாம்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வேளையில் கேப்டன் விஜயகாந்தை இழந்து தமிழகமே தவிர்த்து வரும் வேளையில், முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு விஜயகாந்த் வீட்டுக்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் திரை துறையில் பலரையும் வாழ வைத்த கேப்டன் விஜயகாந்த் மகனோடு இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் ராகவா லாரன்ஸை துவைத்து எடுத்துவிட்டார்.
இதற்குக் காரணம் விஜயகாந்த் மகனுக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது பற்றி தன்னிடம் கூறி இருப்பதாகவும், எனவே திரை உலகைச் சார்ந்த நீங்கள் எல்லோரும் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.
தற்போது வளர்ந்து முன்னணி நடிகர்களாக திகழக்கூடிய சூர்யா, விஜய் போன்ற நடிகர்கள் விஜயகாந்த் செய்த உதவியால் தான் இன்று நிலைத்து இருக்கிறார்கள். நானும் கேப்டனுடன் கண்ணுபட போகுதய்யா படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணி புரிந்திருக்கிறேன்.
அவரைப் போல இனி ஒரு மனிதன் பிறப்பது அரிது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் விளம்பரப் பணிகளை செய்து தர ஆசைப்படுவதாகவும், படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு இணைந்து விளம்பர விழாக்களில் கலந்து கொள்வேன் என்று கூறினார்.
மேலும் திரை உலகினை சார்ந்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் லாரன்ஸ், சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் இது அவர்களது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை. அப்போது தான் கேப்டனின் ஆத்மா சந்தோஷப்படும் என் மனதுக்கு தோன்றியதை கூறினேன் என்று தெரிவித்தார்.
இந்த பேச்சு வீடியோ மூலம் வெளி வந்து வைரலானதுடன் இதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து இருக்கிறார். இது பற்றிய ட்வீட் செய்திருக்கக் கூடிய அவர் “அடடா” என்ற ஒற்றை வார்த்தையில் ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான இணையதளவாசிகள் ராகவா லாரன்ஸை கலாய்த்து கமெண்ட் செய்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உதவியை செய்ய நினைத்திருக்க கூடிய லாரன்ஸ் விஜயகாந்த் இருக்கும் போதே இதை செய்திருக்க வேண்டியதுதானே என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.
மேலும் இவர் ஹீரோவாக நடித்தா.. படம் ஓடாது.. இதுல கெஸ்ட் ரோல் வேறயா.. என்று கலாய்த்து தள்ளியதோடு லாரன்ஸ் தயவு செய்து இதை மட்டும் செய்திடாதீங்க பாவம் அந்தப் பையன் நல்லா வரட்டும் என்று கூறியிருப்பது ஹைலைட்டாக இன்று பேசப்படுகிறது.