உலகம் எங்கும் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற வேளையில் மரபுகளையும், கலாச்சாரத்தையும் அதிக அளவு மதித்து நடக்கும் தமிழகத்தில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஐடி ஊழியர்கள் மரணம் அடைந்த தகவல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இயங்கும் ஐடி நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி வரும் இந்த ஊழியர்கள் கடந்த மூன்று வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
சென்னை சேர்ந்த 25 வயதான லோகேஷ் அம்பத்தூரில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணி செய்து வந்திருக்கிறார். இவர் கடந்த எட்டாம் தேதி அலுவலகத்திற்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்றிய அவரது நண்பர் வாஞ்சிநாதன் என்ற நபரையும் காணவில்லை என்ற புகார் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.
இந்த புகாரில் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் விபரீத முடிவை எடுக்க உள்ளதாகவும் வாஞ்சிநாதன் பேசி அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜை அவரது சகோதரி போலீசில் அளித்திருக்கிறார்.
இதனை அடுத்து அந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் தேடுதலில் களம் இறங்கினார்கள். இதில் முகப்பேரில் இருக்கும் பன்னீர் நகரில் இருக்கும் தங்கும் விடுதி ஒன்றில் வாஞ்சிநாதன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வாஞ்சிநாதன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், தரையில் லோகேஷ் என்ற இளைஞர் சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.
இந்நிலையில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் அடிக்கடி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனை அடுத்து இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் இளைஞர் லோகேஷை கழுத்தை நெரித்து கொன்ற வாஞ்சிநாதன் பின்னர் தனக்குத்தானே தூக்கினை மாட்டிக் இறந்து இருந்திருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி இவர்களது இந்த மரணத்திற்கு என்ன காரணம் என்பதை தற்போது போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவமானது தற்போது சென்னை நகரையே உலுக்கிவிட்டது என கூறலாம்.