சின்ன திரையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் அஸ்வின் கார்த்தி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் பொன்னியின் அண்ணனாகவும், துளசியின் கணவனாகவும் சீரும் சிறப்புமாக நடிப்பை வெளிப்படுத்தி தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
துளசியின் கணவனாக ராஜபாண்டி என்ற கேரக்டர் ரோலில் அனைவரது மனதையும் தொடக்கூடிய அளவிற்கு தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
எனினும் திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை தற்போது விவாகரத்து செய்து விட்டு தனது நீண்ட நாள் தோழியும், மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன காயத்ரியை திருமணம் செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டார்.
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் தனது காதல் விஷயத்தை பகிர்ந்து கொண்ட அஸ்வின் கார்த்தி தற்போது அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் எந்தவிதமான வித்தியாசமும் தெரியவில்லை என்ற கருத்தை பகிர்ந்திருக்கிறார் .
மேலும் தாலி கட்டிய போது தான் வித்தியாசமாக இருந்தது என்றும், தற்போது உரிமையோடு பெட்ரூம் செல்ல முடியும் என்று அஸ்வின் கார்த்தி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு சீரியலுக்காக ஹீரோயின் அடிசனுக்கு வந்திருந்த சமயத்தில் அவரிடம் நெருங்கி பழகி நண்பராக மாறினேன்.
இந்நிலையில் தான் காயத்ரி முதல் முதலில் என்னை பிடித்து உள்ளதாக கூறி ப்ரபோஸ் செய்தார். ஆனால் முதலில் அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன். ஏனென்றால் எனக்கும் காயத்ரிக்கும் இடையே ஒன்பது வயது வித்தியாசம் இருப்பதால் தான் வேண்டாம் என்றேன்.
ஆனால் நான் செல்ல செல்ல பாசம் அதிகமாகி அது காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இது எங்கள் தனிப்பட்ட விஷயம் என்பதால் பெரிதாக வெளியில் தெரியாமல் சமாளித்து விட்டேன்.
ஏற்கனவே என் திருமண வாழ்க்கையில் நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். அத்தோடு வேலையை விட்டுவிடலாமா? என தோன்றியது. அதன் பிறகு காயத்திரி என் வாழ்க்கையில் வந்த பிறகு தான் எனக்குள் மாற்றம் ஏற்பட்டு என்னை நான் சிறப்பாக உணர்கிறேன் என கூறி இருக்கிறார்.
தற்போது என்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரவி ராஜபாண்டியா? இப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது என அவர்களுக்குள் பேசி கலாய்த்து வருகிறார்கள்.