வில்லன் என்ற பெயரை சொல்லும்போதே அவர்களது உடல் மொழி நம் கண் முன் வந்து நிற்கும் அந்த வகையில் 90-களில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் பற்றி சொல்லவே வேண்டாம். அன்று முதல் இன்று வரை இவர் பேசிய அடியை தாய் கிழவி என்ற வசனம் படு பேமஸான ஒன்று என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
முரட்டுத்தனமாக இருக்கும் இவர் உடல்வாக்கு வில்லன் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தது ஆள் பார்ப்பதற்கு ஆஜான பாகுவாக இருப்பதால் தான் இவருக்கு வில்லன் கேரக்டர்கள் அமைந்தது என்று கூட சொல்லலாம்.
ஆனால் இயற்கையில் இவர் சாதுவான மனம் படைத்த குழந்தையாக தான் குடும்பத்தில் இருக்கிறார். இவர் நடிக்கக்கூடிய கேரக்டருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறக்கூடிய அளவு நல்ல மனம் படைத்த நடிகர்.
தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கக்கூடிய வில்லன் பொன்னம்பலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா.
இவருக்கு இடையில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக எதிலும் அதிகம் தலை காட்டாமல் இருக்கும் இவருக்கு சில முக்கிய சினிமா துறை பிரபலங்கள் உதவி செய்ததை அடுத்து தற்போது உடல்நிலை தேறி திரும்புகிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை விரைவில் திரைகளில் பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சூழ்நிலையில் தற்போது பொன்னம்பலம் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக பொன்னம்பலத்தின் மகளின் போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அடுத்த ஹீரோயினி ஆவதற்கு உரிய தகுதிகள் அனைத்தும் உள்ளது. உங்களுக்கு எவ்வளவு அழகான மகளா என்று கமெண்டுகளை போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
உண்மையில் புகைப்படத்தில் பொன்னம்பலத்தின் மகள் சிரித்தபடி சிறப்பாக காட்சி அளித்திருப்பதை பார்த்ததும் விரைவில் புதிய பட ஆபர் அவர் வீட்டை நோக்கி செல்லும் என்ற உறுதியில் ரசிகர்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்களும் உங்கள் அப்பாவை தான் திரையில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நீங்களாவது உங்க சினிமா கேரியரை சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணி நடிக்க வாங்க என்று கூறியிருக்கிறார்கள