சினிமா திரைப்படங்களைப் போலவே என்று சீரியல்களும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியலான மலர் சீரியல் நிவிஷாவை தொடர்ந்து மற்றொரு நபரான அக்னி வெளியேறி இருக்கிறார்.
இல்லத்தரசிகள் விரும்பும் சீரியலாக இருக்கும் மலர் சீரியல் அக்னியின் நடிப்பை பார்த்து பலரும் வியந்தார்கள். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும் டிஆர்பிக்கு பக்க பலமாக இருக்கக்கூடிய இந்த சீரியல் மற்ற சீரியல்களை விட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளது.
ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே, கயல், எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் மிக அருமையான முறையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு மலர் சீரியல் தொடங்கப்பட்டு தற்போது படு ஹிட்டாக ஓடி வருகிறது என்ற தகவல் வைரலாகி உள்ளது.
இந்த சீரியல் ப்ரீத்தி ஷர்மா மற்றும் அக்னி இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். மேலும் இந்த சீரியலானது சுமார் 250 எபிசோடுகளை கடந்து விட்டது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இருந்து தற்போது நடிகர் அக்னி வெளியேறி இருப்பது பெருத்த அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் தந்துள்ளது.
இதற்கு காரணம் எதிர்பாராத விதமாக நடிகர் அக்னியின் உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் குணமடைய நீண்ட மாதம் ஆகும் என்பதால் சீரியல் நல்ல முறையில் ஒளிபரப்பாக வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர் இந்த தொடரில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு பதிலாக புதிய அர்ஜுனனாக யார் வந்தாலும் அவருக்கு உங்களது நல் ஆதரவை கொடுங்கள் என்று கேட்டு கொண்டிருக்கும் நடிகர் அக்னி இந்த சீரியல் ஹிட்டாக வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரது உடல் நலம் மிக விரைவிலேயே குணமாக இறைவனை பிரார்த்திப்பதாகவும் விரைவில் சீரியலில் இணைய வேண்டும் என்ற ஆசையை முன் வைத்திருக்கிறார்கள்.