“பிரபல நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினிகாந்த்..! ஆனால்..” இயக்குனர் பாலச்சந்தர் கூறிய தகவல்..!

அட.. என்னடா.. சொல்றீங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல நடிகையை பெண் பார்க்க சென்றாரா? அதுவும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் கூறிய தகவலை கேட்டறிய ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதால் இந்த பதிவில் அது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி 1981 ஆம் ஆண்டு லதாவை திருமணம் முடித்த நிலையில், அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

ஆனால் இவர் லதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல நடிகையை பெண் பார்க்க சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ஏற்பட்ட சிறு தடங்கலால் அந்த நிகழ்வு நடக்காமல் தடையாகி விட்டது என ரஜினியை அறிமுகம் செய்து வைத்த கே பாலச்சந்தர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது சினிமாவில் தனக்கு என்று ஒரு ஸ்டைலில், சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் 1980 மற்றும் 90-களில் படு பிஸியாக நடித்த நடிகர்களில் ஒருவர். அன்றைய காலகட்டத்தில் இவரோடு நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டு விருப்பம் தெரிவித்து இருந்தார்கள்.

எனினும் ரஜினிக்கு ஸ்ரீதேவியோடு நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அந்த வகையில் ரஜினி, ஸ்ரீதேவியும் முதன் முதலாக மூன்று முடிச்சு என்ற படத்தில் நடித்த போது ரஜினிக்கு வயது 25 ஸ்ரீதேவிக்கு வயது 13 தான். இந்நிலையில் இருவரும் இணைந்து 22 படங்களுக்கு மிகாமல் நடித்திருப்பார்கள்.

மேலும் ரஜினி குடும்பத்தாருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தாருக்கும் நல்ல ஒரு நட்புறவு இருந்த காரணத்தால் படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவியை அக்கறையோடு ரஜினிகாந்த் கவனித்துக் கொள்வார்.

அத்தோடு ஸ்ரீதேவி வீட்டுக்கு கிரகபிரவேசம் நடந்த போது ரஜினியை அழைத்து இருந்தார்கள். அந்த சமயத்தில் ரஜினி ஸ்ரீதேவியை பெண் கேட்டு விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கிரகப்பிரவேச வீட்டில் கரண்ட் கட் ஆகிப்போனதால் பெண் கேட்காமல் திரும்பி வந்துவிட்டார் என்று பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ரஜினிகாந்த் லதாவை 1981இல் திருமணம் செய்து கொள்ள, ஸ்ரீதேவியோ 1996-ல் ஹிந்தி சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam