அடடா.. இது என்ன கோலம் எதற்காக இந்த மொட்டை? என்று நடிகை சுரேகா வாணி-யை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள். நடிகை சுரேகா வாணி தமிழில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் இவர் படு பிஸியான நடிகையாக வலம் வந்தவர்.
தமிழைப் பொறுத்தவரை இவர் உத்தமபுத்திரன், மெர்சல், விசுவாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் தெலுங்கிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா 2019 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இவருக்கு சுப்ரீதா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
கணவனின் மறைவுக்குப் பிறகு மகளோடு தனித்து வசித்து வரும் சுரேகா வாணி அவ்வப்போது தன் மகளோடு சேர்ந்து ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் மகிழ்விப்பார்.
அந்த வகையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த நடிகையை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்று கூறலாம்.
46 வயதை தொட்டிருக்கும் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வரும். எனினும் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் மௌனம் காத்து வரும் சுரேகா வாணி தற்போது திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் அண்மையில் இவர் மொட்டை தலையோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி விட்டார்.
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அண்மையில் திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற சுரேகா வாணி, அங்கு மொட்டை அடித்து நேர்த்தி கடனை செலுத்தி இருக்கிறார்.
இதனைப் பார்த்த சில இணையதள வாசிகள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்கள் அனைவராலும் பார்க்கப்பட கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.