“ஓரினச்சேர்க்கை.. ரிஸ்க் எடுக்க பயந்தேன்.. ஆனால் இயற்கையாகவே..” கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் சமீபத்திய பேட்டி ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் ஓரினச்சேர்க்கை குறித்தும் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தது குறித்தும் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் கௌரி கிஷன்.

என்ன கூறினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் நடிகை கௌரி கிஷன் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் கூட அவ்வப்போது ஆல்பம் பாடல்களில் நடிப்பது அவருடைய வழக்கம்.

அந்த வகையில் மகிழினி என்ற ஒரு ஆல்பம் பாடலில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தார். இந்த பாடலில் நடித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் இந்த பாடலில் நான் ஓரினச்சேர்க்கையாளராக நடிப்பதற்கு முக்கிய காரணம் இந்த பாடலின் இயக்குனர் என்னிடம் அணுகிய விதம் தான்.

ஆனாலும் கூட, இப்போதுதான் நான் வளர்ந்து வரும் நடிகை. இந்த நேரத்தில் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா..? ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டுமா..? என்ற ஒரு எண்ணம் என் மனதுக்குள் இருந்தது.

ஆனால் நான் சம்மதம் சொன்ன பிறகு நான் தைரியமாக நடித்தேன். என்னுடைய முழு பயத்தையும் நீக்கி விட்டு நடித்தேன் என்றெல்லாம் நான் கூற மாட்டேன். இயற்கையாகவே நான் நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

பொதுவாக நடிக்கும் பொழுது நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்திருக்கிறோம் அது இயற்கையாக வரும் ஆனால் அதையே சக நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது ஆரம்பத்தில் நெருடலாக இருந்தது.

ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் அவர்கள் படக்கூடிய கஷ்டம் சமுதாயத்தில் அவர்கள் நடத்தக்கூடிய விதம் இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு இதில் நாம் நடிக்க வேண்டும் கண்டிப்பாக இது ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்தான தவறான, அந்நியமான எண்ணத்தை மாற்றும் வகையில் இருக்கும் என்று நம்பினேன்.

எனவே எனக்கு இயற்கையான நம்பிக்கை வந்தது. எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் ஒரு இயற்கையாக என்னால் நடிக்க முடிந்தது. ஓரினச்சேர்க்கையாளர்கள் திருநங்கைகள் எல்ஜிபிடிக்யூ பிளஸ் சமுதாயத்தினர் அனைவருமே நம்முடன் இருப்பவர்கள் தான். நம் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான். அவர்களுக்கு உண்டான பங்கு அவர்களுக்கு கிடைக்கிறதா..? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

இது நார்மல் ஆக வேண்டும். எப்படி ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்வது கொள்வது சாதாரணமாக இருக்கிறதோ..? அதுபோல எல்ஜிபிடிக்யூவும் சாதாரணமாக பார்க்கப்பட வேண்டும்.

ஒரு காலத்தில் திருநங்கைகளை நாம் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், தற்போது அது மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில காலம் கழிந்த பிறகு எதுவும் சமுதாயத்தில் சாதாரணமான ஒரு விஷயமாக பார்க்கப்படும்.

இந்த நம்பிக்கை எனக்குள் இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன். இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam