தமிழ் நடிகைகளில் நம்ப முடியாத நிஜ அக்கா தங்கை பட்டியல்..!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகையர் பலர் நடிக்கின்றனர். இதில் வாரிசு நடிகர்களாக பலர் களம் இறக்கப்படுவர். இயக்குநர்கள் மகன்கள், மகள்கள் நடிப்புத்துறைக்கு வருகின்றனர்.

அந்த வகையில் நடிப்புத்துறைக்கு வந்த அக்கா, தங்கை நடிகையர் பலர் உள்ளனர். இதில் பெரும்பாலும் இருவரில் ஒருவர்தான் மிக பிரபலமாக சினிமாவில் சாதித்திருக்கின்றனர். அவர்களை பற்றி பார்ப்போம்.

நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை, பிரவீணா – பல படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் மாமியார் கேரக்டரில் அசத்திக்கொண்டு இருக்கிறார்.

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால். இவர் காஜல் அகர்வால் போல தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக தெரியவில்லை. ஆனால், பிறமொழிகளில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார்.

பானுப்பிரியா தங்கை சாந்திப்பிரியா, எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், ராமராஜன் ஜோடியாக நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்தாலும், பானுப்பிரியா போல பெரிய அளவில் பேசப்படவில்லை.

ஷாலினி தங்கை ஷாம்லி, சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். வளர்ந்த பின் ஷாலினி போல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக பேசப்பட்ட சிம்ரன், பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். பத்ரி, பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின் போன்ற சில படங்களில் மட்டுமே மோனல் நடித்தார். ஆனால் வெற்றி பெறவில்லை.

நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி சில படங்களில் நடித்தாலும் வரவேற்பு இல்லை. ஆனால் அம்பிகா, தங்கை ராதா இருவரும் தமிழ் சினிமாவில் முடிசூடா ராணிகளாக ஒருகாலகட்டத்தில் இருந்தனர்.

நக்மா தங்கை ஜோதிகா, இருவருமே பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள். ராதிகா, அவரது தங்கை நிரோஷா இருவருமே தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணன் தங்கை வினயா கிருஷ்ணன் தமிழில் பெரியதாக பேசப்படவில்லை.

இந்த அக்கா தங்கை வரிசையில் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், ஸ்ரீதேவி விஜயகுமார் – ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி – ஸ்ரீலதா ஆகியோரில் அக்கா அளவுக்கு தங்கை நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு இல்லை. இப்படி பலர், அக்கா, தங்கை நடிகைகளாக தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *