பைரவா படத்தில் அறிமுகமானவர். ராட்சசன், அசுரன் படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ராட்சசன் படத்தில் ஹீரோ விஷ்ணு விஷாலின் அக்கா பெண்ணாக நடித்திருப்பார். அசுரன் படத்தில் பிளாஸ்பேக்கில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
சமீபத்தில் அவர் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். அந்த கசப்பான, நோய்வாய்ப்பட்ட அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது, எல்லோரும் எப்படி இருக்கறீங்க, நாம் எல்லோருமே கேள்விப்படறோம். நம்மை சுத்தி இருக்கிற எல்லோருக்குமே பயங்கரமான ஜலதோசம், இருமல், ப்ளு பீவர் அது பயங்கரமா பரவீட்டு இருக்கு.
தயவு செஞ்சு இதை சாதாரணமாக நெனைச்சுராதீங்க. ஏன்னா அது எனக்கு வந்துச்சு. பாடா பட்டுட்டேன். சிரீயஸா போச்சு.
ஒரு வாரமாக பயங்கர உடம்பு வலி, இருமல், காய்ச்சல், ஒரு மளிகை கடை ஜாமான் முழுக்க என் உடம்புக்குள்ள போன மாதிரி இருந்துச்சு. இது ரொம்ப ரொம்ப மோசம்.
லைட்டா கிச்சுகிச்சு இருந்தாலோ, உடம்பு வலி இருந்தாலோ அது என்ன, எதனால அப்படீன்னு நீங்க பிராப்பரா கண்டுபிடிச்சு ஸ்மார்ட்டா ரியாக்ட் பண்ணிடுங்க.
வெந்நீர் குடிங்க, சீரகம் தண்ணீர் குடிங்க. ஜலதோஷம் இல்லைன்னாலும், இதை பாலோ பண்ணுங்க. இந்த குளிர்காலத்துல ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.
வெளியில் போகும்போது மறக்காம, தயவுசெய்து மாஸ்க் கரெக்டா போட்டுட்டு போங்க. பாதுகாப்பா இருங்க. அப்படி இருந்தா, கண்டிப்பா ப்ளூ காய்ச்சலை தவிர்த்திடலாம் என்று, சொல்லி இருக்கிறார் அம்மு அபிராமி.
ப்ளூ காய்ச்சலால், ஒரு வாரம் அந்த உடம்பு வலியை என்னால தாங்கிக்க முடியல என இளம் நடிகை அம்மு அபிராமி, இதில் தான் பட்ட மிக மோசமான துன்பத்தை சொல்லி இருக்கிறார்.