விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் ரச்சிதாவுக்கு, தினேஷுக்கும் இடையே காதல் பூத்ததை அடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் போல இவர்கள் திருமணத்திற்கு நீங்கள் ஆசீர்வாதம் கூட செய்திருக்கலாம். எனினும் ஆரம்ப நாட்களில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது கூட பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் தன்னுடைய அன்பை பல வகைகளில் வெளிப்படுத்தி இருந்தாலும் அதற்கு உரிய பதிலை தனது மனைவி ரச்சிதாவிடம் இருந்து பெற முடியவில்லை.
இந்நிலையில் அண்மை பேட்டியில் கூட தினேஷ் பேசும் போது ரச்சிதாவிற்கும் எனக்கும் விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்நிலையில் நடிகை ரச்சிதா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.
இதனை அடுத்து ரச்சிதாவிற்கு இரண்டாவது திருமணமா? மாப்பிள்ளை யார்? என்பது போல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வரும் ரசிகர்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் யார் மாப்பிள்ளை என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஆண்டுகளிலேயே தகவல்கள் வெளி வந்தது. இந்நிலையில் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்து இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார் என்ற செய்தியும் வெளி வந்தது.
இந்தப் படம் வெளி வந்த உடனேயே அவர் திருமணம் செய்து கொள்வார். அதுவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் நடித்த முதல் படம் வெளியாக இருக்கும் நிலையில் கன்னட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எனினும் இது குறித்த உண்மை நிலவரம் பற்றி ரச்சிதா மகாலட்சுமி இது வரை எந்த ஒரு பதிவையோ, கருத்தையோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரச்சிதா தற்போது கன்னடத்தில் பாரிஜாதா, ரங்கநாயகா என்ற படங்களிலும் தமிழில் உப்புக் கருவாடு என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரை உலகை பொருத்த வரை திருமணம் என்பது சட்டையை மாற்றுவது போல நாள் ஒருவர் என்று மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில் கலாச்சார சீர்கேடுக்கு பக்க பலமாய் இருந்து வருகிறது என கூறலாம்.