சீரியல் நடிகைகளில் வில்லி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வந்தனா.
ஆனந்தம் சீரியல் மூலம் முதன்முறையாக வில்லி கேரக்டரில் வந்தனா அறிமுகமானார். முதல் சீரியலிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து தங்கம், காதல் முதல் கல்யாணம் வரை, மெல்லத் திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து நளனும், நந்தினியும் என்ற சீரியலில் நடித்த போது அதில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களது திருமணம் 2011ம் ஆண்டில் நடந்தது.
விஜய் டிவியில் மிஸஸ் சின்னத்திரை, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் வந்தனா மைக்கேல் தம்பதி பங்கேற்று, ரசிகர்களின் கவனத்தை பெற்றனர்.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து மைக்கேல் தங்கதுரை ஒரு நேர்காணலில் கூறியதாவது, வந்தனாவுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்ற தகவலில் உண்மை கிடையாது.
நாங்கள் இருவரும் இணைந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது கிடையாது. மற்றபடி நாங்கள் வீட்டில் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
தற்போது இந்த பேட்டிக்கு வரும்போது கூட இந்த ஆடையை அணிந்து செல்லுங்கள் அதுதான் சரியாக இருக்கும் என தேர்வு செய்து அதனை அயர்ன் செய்து கொடுத்ததே வந்தனா தான்.
நாங்கள் மீடியா வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்று சேர்க்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் அவருடைய கணவரும் நடிகருமான மைக்கேல்.