ரஜினி தலைமுடி பறி போன ரகசியம்..! – உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார். 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து பேரும், புகழும், செல்வாக்கும் சம்பாதித்த ரஜினிகாந்த், இப்போதும் 73 வயதில் ஹீரோவாக நடிக்கிறார்.

ரஜினி காந்த்..

ரஜினிகாந்த் என்றாலே அவரது ஸ்டைல்தான் முதலில் அவரது ரசிகர்களுக்கு நினைவில் வரும். அதுவும் அவர் தனது பழைய படங்களில் தலைமுடியை ஸ்டைலாக கோதி விடும்போது தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கும்.

ரஜினி ஹேர் ஸ்டைல்தான் அவரது முதல் அடையாளமாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. கலைத்துவிட்ட அவரது ஹேர்ஸ்டைலால் பலரும் அவரை பரட்டையன் என்றும் கூறுவர். 16 வயதினிலே படத்தில் அவர் கேரக்டர் பெயரும் பரட்டை தான்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் தலைமுடி எல்லாம் கொட்டிப் போய்விட்டது. அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு பிறகு ரஜினிக்கு முன்பக்க வழுக்கை அதிகரிக்க ஆரம்பித்ததால் அதிக காட்சிகளில் விக் பயன்படுத்த ஆரம்பித்தார்.

ஒருகட்டத்தில் படம் முழுக்கவே ரஜினி விக் வைத்துக்கொண்டு நடிக்கும் அளவுக்கு முன்பக்கத்தில் இருந்து தலையின் பின்பகுதி வரை முடி கொட்டி, தலையே மொட்டையாகி விட்டது.

ஆனால் 80 வயது கடந்த சிவக்குமார், 70 வயது கடந்த மம்முட்டி, சரத்குமார் 69 வயது கடந்த கமல்ஹாசன் போன்றவர்கள் இன்னும் நல்ல தலைமுடியுடன் காணப்படுகின்றனர்.

தலைமுடி ரகசியம்..

ரஜினிகாந்த் தலைமுடி ரகசியம் குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ரஜினியிடம் சிலர் கமலுக்கு இன்னும் நன்றாக தலைமுடி உள்ளது, உங்கள் தலைமுடி ஏன் கொட்டிவிட்டு என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் கூறிய ரஜினிகாந்த், சின்ன வயதில் எனக்கு தலைமுழுக்க நிறைய முடி இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் என் தலைமுடி வெள்ளையாக துவங்கி விட்டது. வெள்ளை முடியை கருப்பாக்க ஹேர்டை தலைக்கு பயன்படுத்தினேன்.

இதுவே ஒரு கட்டத்தில் எனக்கு அலர்ஜியாகி விட்டது. பலவிதமான டைகளை மாற்றி மாற்றி தலைக்கு பூசியதால் ஒரு குறிப்பிட்ட வயதில் என் தலைமுடி எல்லாம் மளமள என கொட்ட ஆரம்பித்துவிட்டது, என்று கூறியிருக்கிறார் என்று இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *