நடிகை சில்க் ஸ்மிதா, தமிழ் சினிமா கொடி கட்டி பறந்த ஒரு நடிகை என்றால் அது மிகையல்ல. கடந்த 1980, 90களில் ஹீரோக்களுக்கு இருந்த வரவேற்பும், மரியாதையும் சில்க் ஸ்மிதாவுக்கு இருந்தது.
இப்போதும் சில்க் ஸ்மிதாவை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இளம் வயதிலேயே திருமணம் கூட செய்யாமல் இறந்து விட்டார். அவரது மறைவு தற்கொலையா, கொலையா என்பதில் இன்றுவரை மர்மமே நீடிக்கிறது.
சில்க் ஸ்மிதா..
அவரை போலவே தோற்றம் கொண்ட ஒரு நடிகையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருப்பார் மற்றொரு டூப் சில்க் ஸ்மிதா. அந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும், சிலக் ஸ்மிதாவின் தோற்றத்தில் அச்சு அசலாக அப்படியே இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உண்மையான பெயர் விஷ்ணுபிரியா காந்தி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போலவே இருப்பதால், மார்க் ஆண்டனி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சமாதி..
ஒரு நேர்காணலில் சில்க் ஸ்மிதா குறித்து, விஷ்ணு பிரியா காந்தி கூறுகையில், சில்க் ஸ்மிதா இறந்துவிட்டதால் அவரது சமாதியை பார்க்க நினைத்தேன்.
சென்னைக்கு ஒரு இன்டர்வியூவுக்கு மார்னிங் வந்த போது சில்க் ஸ்மிதா சமாதியை பார்க்க முடிவு செய்தேன்.. பல நண்பர்களிடம் விசாரித்தேன்.
கூகுள் சர்ச் பண்ணியும், யூடியூப் பலவற்றில் தேடியும் அதுகுறித்து சரியான தகவல் எனக்கு கிடைக்கவில்லை.
பல நண்பர்களிடம் விசாரித்த நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு பின்னால் இருப்பதாக சொன்னார்கள். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனேன். அங்கிருந்த ஒரு செக்யூரிட்டி இங்கு சமாதியே இல்லையேம்மா என்றார்.
இன்னொருத்தர் பேக்சைடு இருக்குதும்மா என்றார். அங்கு பேக்சைடு போய் பார்த்தேன். அங்கே சுடுகாட்டுக்குள் போனவுடன் ஒரு மாதிரியாக இருந்தது.
அங்கே இருந்த ஒரு அண்ணாவை கூப்பிட்டு கேட்ட போது, அவர் ஒரு சமாதியை காட்டி இது ஆக்டரும்மா, இது கீழேதான் புதைச்சாங்க என்றார்.,இதுக்கு கீழே புதைச்சாங்களா என்ற அதிர்ச்சியில் எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
என்னங்க அவ்வளவு பெரிய ஆக்ட்ரஸ் அவங்க? கீழே புதைச்சாங்கன்னு சொல்றீங்க என்று கேட்டதற்கு நான் வந்து ரெண்டு வருஷமாச்சு. அதுக்கு முன்னாடியே இப்படி பண்ணிட்டாங்க என்று அவர் சொன்னதாக, நேர்காணலில் விஷ்ணு பிரியா காந்தி கூறியிருக்கிறார்.
சில்க் ஸ்மிதா சமாதியை பார்க்கப் போன போது டூப் சில்க் ஸ்மிதாவுக்கு அப்படி ஒரு பகீர் அனுபீவம் ஏற்பட்டதை இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.