பிரபல நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹாபி இருக்கும். சில விஷயங்களில் அவர்களுக்கு ஈடுபாடும், ஆர்வமும் அதிகமாக காணப்படும்.
அந்த வகையில் ரஜினிக்கு மிகவும் பிடித்தது ஆன்மிகம்தான். அடிக்கடி இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு செல்வது, இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு அவரது விருப்பமாக இருக்கிறது.
நடிகர் அஜீத்குமாருக்கு பைக் பயணம் மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பு இருந்த அந்த ஆர்வம், இன்று வரை அவருக்கு தொடர்கிறது.
இப்போதும் வாரக்கணக்கில் பைக்கில் பயணிக்க அவர் விரும்புகிறார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு நடிப்பு போலவே பிடித்த மற்றொரு விஷயம் வாசிப்பு. அவர் பெரும்பாலான நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பதில்தான் கழிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதனால்தான் புத்தக பரிந்துரை செய்வதை வழக்கமாக செய்து வருகிறார்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கிறது. அதை சிலர் வெளிப்படுத்துவார்கள். சிலர், ரகசியமாக வைத்துக்கொள்வது உண்டு.
விஜய்…
அந்த வகையில் நடிகர் விஜய், கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு கார் விரும்பி. விதவிதமான கார்களை வாங்க ஆசைப்படுபவர்.
புதிதாக மார்க்கெட்டுக்கு எந்த உயர்ரக கார் வந்தாலும் அதுபற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்வதில் விஜய் அதிக ஆர்வம் காட்டுவார்.
சிறுவனாக இருந்து வாலிபராக வளர்ந்த விஜயிடம், முதன்முறையாக அவருடைய அப்பா இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்டிருக்கிறார்.
அப்போது மார்க்கெட்டுக்கு புதிதாக வந்த கார் மாடல் ஒன்றை சொல்லி அதை வாங்கிக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
மின்சார வாகனம்..
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். அதனால் எலக்ட்ரிக் கார்களுக்கு மவுசு கூடிவிட்டது.
மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் கார் பயன்பாடும் முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய், ஒரு மின்சார வாகனம் வாங்கியிருக்கிறார். பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்றை 2.13 கோடி ரூபாய் விலையில் வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமா நடிகர்களில் முதல் ஆளாக எலக்டரிக் காரை அதிக விலை கொடுத்து முதலில் வாங்கியவர் நடிகர் விஜய்தான். அதன் விலை ரூ. 2.13 கோடி என்று தெரிந்ததும் பலரும் ஆடிப்போயிருக்கின்றனர்.