நடிகர் விஜய் தன்னுடைய தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருக்கிறார் என்ற தகவல்கள் நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து வந்து கொண்டு இருக்கின்றன.
கட்சியை பதிவு செய்வதற்கான வேலைகளில் நடிகர் விஜய் மும்முரமாக இறங்கி இருக்கிறார் இதற்காக ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள் சிலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறார் நடிகர் விஜய்.
அதன்படி கட்சியை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பதிவு செய்யும் முயற்சியில் அந்த குழு ஈடுபட்டிருக்கிறது. அதற்கான சட்ட நுணுக்கங்கள் வழிகாட்டுதல்களை அந்த குழு நடிகர் விஜய் மற்றும் அவர் குழுவில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது என தெரிகிறது.
கட்சி சார்ந்த சட்டபூர்வமான முடிவுகள் அனைத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவே முடிவு செய்கிறது என கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவில் நடிகர் விஜய் இறங்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலை தான் குறி வைத்து இருக்கிறார். தற்போது கட்சி ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய வாக்கு சதவீதம் என்ன என்று தெரிந்து கொண்டால் அடுத்த கட்ட அதனுடைய நடவடிக்கைகளை முடுக்கி விட தயாராக இருக்கிறார் நடிகர் விஜய் என்று கூறப்படுகிறது.
மேலும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று தன்னுடைய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அதிகாரப்பூர்வ கொடி ஆகியவற்றை நடிகர் விஜய் அறிவிக்கிறார் என்று கூறப்படுகிறது. மதுரையில் தன்னுடைய முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், இது குறித்து இதுவரை அதிகாரம் ஒரு தகவல்களும் நமக்கு கிடைக்க வில்லை. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அரசியல் கட்சியாக பதிவு செய்ததும் கட்சிக்காக என்ன சின்னம் வேண்டும் என்ற முடிவில் உயர்மட்ட குழு இறங்கிய பொழுது ஆட்டோ சின்னத்தை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த போது அவருக்கு ஆட்டோ சின்னம் தான் கொடுக்கப்பட இருக்கிறது என்றெல்லாம் தகவல் வெளியாகின. இன்னும் சில ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் ஆட்டோ சின்னம் கிடைத்து விட்டது என்று அவருடைய பாடலான ஆட்டோக்காரன் பாடலை பல்வேறு ஊர்களில் ஒளிபரப்பி அரசியல் பிரச்சாரங்களை கூட ஈடுபட்டனர்.
ஆனால், கட்ட கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்னை நம்பி அரசியலுக்கு வருவோருக்கு மிகப்பெரிய பண நஷ்டம் ஏற்படும் என்ற யோசனை அடிப்படையில் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க என்பதற்க்காக என்னை நம்பி வரும் நண்பர்களின் வாழ்கையை நான் வீணடிக்க விரும்பவில்லை.
இங்கே கிராமத்தில் இருக்கும் 30 சதவீத வாக்காளர்களுக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்ற யோசனையே இல்லை. பரம்பரை பரம்பரையாக ஒரே சின்னம் ஒரே கட்சி என்று வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். அந்த புரிதல் இல்லாத போது நாம் கட்சி தொடங்கி வெற்றி பெறுவது என்பது கடினமான விஷயம். உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு கூட்டங்களை நடத்தி மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
தற்போது விஜய் அரசியலுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ஆட்டோ சின்னம் கிடைக்க இருக்கிறது என்ற தகவல் வந்திருக்கின்றது. இது குறித்து மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜயின் தீவிரமான அரசியல் நகர்வுகள் ஒட்டுமொத்த அரசியல் தலைகளின் பார்வையை நடிகர் விஜயின் பக்கம் திருப்பி இருக்கிறது. மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரமே ஒரு விதமான சலசலப்பில் தான் இருக்கிறது என்பதை கண்கூட பார்க்க முடிகிறது.