திருமணம் செய்யாமல்.. நயன்தாரா பட நடிகரால் கர்ப்பமான நடிகை..? காரி துப்பும் திரையுலகம்..!

நடிகை மந்தனா கரிமி ஈரான் நாட்டைச் சேர்ந்த நடிகை ஹிந்தியில் மாடல் அழகியாகவும் நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறிய ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கௌரவ் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு ஒரு நீதிமன்றத்தின் படி ஏறினார்.

விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரபல நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பமாகி இருக்கிறார் நடிகை மந்தனா கரிமி.

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது கர்ப்பமாகிய பின்பு என்னை கர்ப்பம் ஆக்கிய நடிகரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டேன். ஆனால், அவர் உனக்கு இன்னும் விவாகரத்தே ஆகவில்லை. அதற்குள் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பம் ஆகிவிட்டாய். உன்னை போன்ற ஒரு பெண்ணை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறினார்.

அந்த நொடி  என்னுடைய உலகமே இருண்டு போனது போல இருந்தது என கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கியது. ஆனால், இவர் பேசிய விஷயங்களை வைத்து இது நடந்த காலகட்டம் என்ன என்பதை கணித்து இணைய பக்கத்தில் இந்த நடிகர் தான் இந்த வேலையை செய்தது இந்த இயக்குனர் தான் நடிகை கர்ப்பமாகி கழட்டி விட்டது என விவாதங்கள் எழுதுந்தன.

சமீபத்தில் தமிழில் பிக் பாஸ் நடிகை விசித்ரா கூறிய கதையை கேட்ட பின்பு எப்படி நடிகர் பாலகிருஷ்ணா தான் அந்த சீண்டலில் ஈடுபட்டது என விவாதங்கள் ஏழுந்ததோ அதுபோல நடிகை மந்தனா கரிமி விவாகரத்தில் சிக்கியவர் வேறு யாரும் கிடையாது இமைக்கா நொடிகள் மற்றும் லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் அனுராக் காஷ்யப்தான்.

இந்த விவரங்கள் இணைய பக்கங்களிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களிலும் பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது அவர் கிடையாது நான் அவருடைய பெயரை எங்கும் கூறவில்லை நானே என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று கூற விரும்பாதபோது பரபரப்புக்காக யாராவது ஒரு பெயரை இழுத்து விட்டு என்னுடைய பெயரையும் அவருடைய பெயரையும் கலங்கப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நான் அப்போது அனுபவித்த கொடுமையை விட இப்போது என்னைப் பற்றி வரக்கூடிய போலியான செய்திகளை நினைத்துதான் இன்னும் வேதனைப்படுகிறேன்.

தயவுசெய்து இப்படியான அடிப்படை ஆதாரம் மற்றும் தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டி இருந்தார். இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட கட்டிய கணவரை விவாகரத்து செய்யும் முன்பு ஒரு இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு கர்ப்பமாகும் அளவுக்கு உங்களுக்கு என்ன அவசரம் வந்தது.

அப்படி என்றால் தவறு கண்டிப்பாக உங்கள் கணவன் மீது இருக்க வாய்ப்பே கிடையாது என நடிகையை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam