லைக்கா புரடக்சன் தயாரிப்பில், ரஜினிகாந்த் மூத்த மகள் டைரக்ட் செய்த படம் லால் சலாம். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்திருக்கிறார்.
கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றால், சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகாமல், மொத்தம் 22 காட்சிகளில், 45 நிமிடங்கள் ரஜினி இருக்கும் காட்சிகள் படத்தில் வருகின்றன.
இந்த படத்தில் ரஜினி அறிமுக காட்சியே மாஸ் சண்டைக்காட்சியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் இருக்கும் நண்பராக தம்பி ராமையாவும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் விக்ராந்த், ரஜினி மகனாக நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை சாய் ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. ரஜினிகாந்த், விஜய் குறித்து பேசியது வைரலானது.
வரும் பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணா குறித்து கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன். அது வைரலாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. அப்போது கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணா, தமிழர்களை இழிவாக பேசியிருந்தார்.
பிச்சைக்கார தமிழர்களே..
தண்ணீருக்காக தமிழர்கள் எங்களிடம் பிச்சை எடுக்கறீர்கள். பெங்களூரை ஆக்கிரமித்து எங்கள் ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள்.
எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம். பிச்சைக்கார தமிழர்களே என, டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இது பயங்கர வைரலானது. ஹேஷ்டாக் தன்யா டிரண்டிங் ஆனது.
இதுகுறித்து ப்ளு சட்டை மாறன், தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று அழைத்ததை அடிக்கோடிட்டு காட்டி, தற்பொழுது இவர்தான் லால் சலாம் திரைப்படத்தின் ஹீரோயின்.
சிக்கலில் லால் சலாம்..
இதை நான் எதற்காக கூறுகிறேன் என்றால், தமிழர்கள் இந்த படத்தை ஹிட் ஆக்க வேண்டும். வேறு எதையும் கேட்கக் கூடாது என்பதற்காக தான்.
என்று பதிவு செய்திருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
அதனால் தமிழர்களை இழிவாக பேசிய தன்யா பாலகிருஷ்ணாவை, கதாநாயகியாக வைத்து படம் எடுத்ததால், சிக்கலில் லால் சலாம் தவிக்கிறது.
பிச்சைக்கார தமிழர்களே என லால் சலாம் ஹீரோயின் பேசியதை ப்ளு சட்டை மாறன் கொளுத்திப் போட்டதால், இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.