விரட்டப்பட்ட சித்தார்த்..தமிழர்களை பிச்சைக்காரனுங்க என சொன்ன நடிகை இந்த ஹீரோயின்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார்.

ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து வந்த சித்தார்த், பெண் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலை வைத்து சித்தா என்ற படத்தை தயாரித்தார்.

பண்ணையாரும் பத்மினியும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார்தான் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

பழனி மற்றும் பழனியை சுற்றி நடக்கும் இந்த படத்தின் கதை, மிகவும் யதார்த்தமானது. அதே நேரத்தில் வாழ்வியல் பயங்கரத்தை சொல்லும் படமாகவும் இருந்தது.

இந்த படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியிட அதற்கான பிரமோசன்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ என்ற முறையில் சித்தார்த் பெங்களூரு சென்றார்.

வெளியேற்றப்பட்ட சித்தார்த்..

சித்தா படத்தின் ப்ரோமோஷனுக்காக கர்நாடகா சென்றிருந்த நடிகர் சித்தார்த்தை காவேரி பிரச்சனையை காரணம் காட்டி அங்கிருந்த கன்னட அமைப்பினர் சிலர் வம்படியாக வெளியேற்றினார்கள்.

அப்போது, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது ஒரு பக்கம் இருக்க சாதாரண ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்ற அளவுக்கு எள்ளி நகையாடியவர் பிரபல கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணா.

லால் சலாம் கன்னட ஹீரோயின்..

அவர்தான் இப்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தற்போது லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

காரணமே இல்லாமல் கன்னட அமைப்பினர் சித்தார்த்தை ப்ரோமோஷன் செய்ய விடாமல் தடுத்தனர். அவருடைய தமிழ் படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு பூட்டு போட்டனர்.

ஆனால், இங்கே தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய தன்யா பாலகிருஷ்ணா ஹீரோயினாக நடித்திருக்கக்கூடிய படம் லால் சலாம்.

இந்த படத்திற்கு தமிழர்கள் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி, இணைய பக்கங்களில் பெரும் விவாதப் பொருளாக, இப்போது மாறி இருக்கிறது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் விரட்டப்பட்ட நிலையில், தமிழர்களை இழிவாக திட்டிய லால் சலாம் நாயகி தன்யா பாலகிருஷ்ணா குறித்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *