அப்படினா.. அரசியல் செய்தி எல்லாம் பொய்யா கோபால்.. வெளியான தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் தளபதி விஜய் விரைவில் அரசியலில் களம் குதிக்கப் போவதாக ரசிகர்கள் அதற்கு உரிய ஏற்பாடுகளை அவரவர் பகுதிகளில் செய்து வருவதாக அடிக்கடி இணையங்களில் செய்திகள் கசிவது வாடிக்கையானது.

அரசியலில் விஜய்…

அந்த வகையில் தளபதி விஜய் விரைவில் அரசியலில் நுழைவார் என்ற நம்பிக்கையில் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அடைக்க கூடிய வகையில் சில விஷயங்கள் வெளி வந்து உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் திரை துறையில் நடிப்பவர்கள் சிஎம் ஆவது ஒன்றும் பெரிய அதிசயம் அல்ல. அந்த வகையில் எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா வரை திரை உலகை ஆட்சி செய்த பெருமக்கள் தமிழ் திருநாட்டையும் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

 

மேலும் கேப்டன் விஜயகாந்த், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலரும் அரசியலில் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களது சக்திக்கு ஏற்றது போல களம் இறங்கி அரசியல் வேட்டையில் சாதுரியமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

மேலும் தளபதி விஜயின் ரசிகர் மன்றம் மக்களுக்கு மிகச்சிறந்த பணியை ஆற்றி வருவதாகவும், அண்மையில் கூட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து அங்கு தளபதி விஜய் நிவாரண பொருட்களை தந்து மக்களை சந்தித்ததெல்லாம் அரசியலில் களம் இறங்க நடத்தப்படும் ஒத்திகை தான் என்ற பேச்சுக்கள் எழுந்தது.

அடுத்த பட அறிவிப்பு..

இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றியை உலக அளவில் பெற்று தந்தது.

இதனை அடுத்து அந்த படத்தை தயாரித்த டிவிவி தனய்யா, விஜயின் 69 ஆவது படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளி வந்து உள்ளது. மேலும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தால் கண்டிப்பாக விஜய் அந்த படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படமானது மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாக உள்ள நிலையில் இதன் இயக்குனர் யார் என்பது விரைவில் தெரியவரும். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய் 69 படத்தின் பட வேலைகள் ஆரம்பிக்கப்படலாம்.

 

இதற்கிடையில் நடிகர் விஜய் தீவிரமாக அரசியலில் இறங்க உள்ளதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்க கூடிய வேளையில் அடுத்து இரண்டு வருடங்களில் அவர் நடிப்பை விட்டு விலகுவாரா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதற்கு காரணம் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட் ஆகி வருவது தான்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரக்கூடிய இவர் எப்போது பட வாய்ப்புகளில் இருந்து விலகி திரைப்படத்தில் நடிப்பதை விடுத்து அரசியலில் குதிப்பார். அது எப்போது நடக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது காத்திருக்கிறார்கள்.

இன்னும் சிலர் ரசிகர்கள் இவர் ரஜினிகாந்தை போல் வருவேன் வருவேன் என்று வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து அரசியல் பிரவேசம் செய்யாமல் இருப்பாரோ? என்ற சந்தேகங்களையும் கிளப்பி விட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் அப்படியான அரசியல் செய்தி எல்லாம் பொய்யா கோபால்.. என்பது போல ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகிவிட்டார்கள்.

எனவே தளபதி விஜய் தனது அரசியல் பிரவேசத்தை பற்றி விரைவில் வாய் திறந்து பேசினால் மட்டுமே உண்மை நிலை என்ன என்பதை எல்லோருக்கும் தெரியவரும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam