பத்து வருஷத்துக்கு முன்னாடியே அது நடந்துடுச்சு.. ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்..!

திரைப்படங்களில் வாரிசு நடிகைகள் மற்றும் நடிகர்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களின் ஒரு சிலர் மட்டும் தான் வெற்றியை அடைந்து மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய நடிகை மற்றும் நடிகர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் கமலஹாசனின் மகளாகிய ஸ்ருதிஹாசன் பன்முக திறமையை கொண்டவர்.

ஸ்ருதி ஹாசன்..

உலக நாயகன் கமலின் மகளாகிய ஸ்ருதிஹாசன் தென்னிந்திய மொழிகளில் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார். இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை வாரிசு நடிகரான சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமாகி தன்னுடைய அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து பெரும் அளவு ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது அப்பா உலகநாயகன் கமலஹாசனை போலவே லிவிங் டூகதர் முறையில் வாழ்ந்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணறடிப்பார்.

தற்போது தமிழில் அதிக திரைப்படங்கள் இல்லாத காரணத்தால் அக்கட தேசத்தில் செட்டிலாகி பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக இந்திய சினிமாவில் பான் இந்தியா என்ற வார்த்தை அதிக அளவு புழக்கத்தில் வந்துள்ளது. இந்நிலையில் தென்னிந்திய ஹீரோக்களின் படங்கள் தற்போது இந்தி ரசிகர்களையும் கூறி வைத்து எடுக்கப்படுவதால் எந்த படங்களை பான் இந்திய படங்கள் என்று கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த நடிகர் நடிகைகளை பான் இந்திய ஸ்டார் என்று தற்போது அழைத்து வருகிறார்கள்.

பத்து வருஷத்துக்கு முன்னாடியே..

வாரிசு நடிகையான ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பான் இந்திய நடிகையைப் பற்றி கேட்ட போது இவர் தன்னை மற்ற நடிகைகளோடு ஒப்பிடுவதை விரும்பவில்லை என்று ஆரம்பத்தில் கூறினார்.

மேலும் இவர் அறிமுகமாகி வளர்ந்த கால கட்டத்தில் அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்திருப்பதாக கூறி இருக்கிறார்.

அத்தோடு சமூக வலைத்தளங்கள் ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பே அந்த செயலை தான் செய்திருப்பதாக கூறியதோடு தான் அன்று கொடுத்த பேட்டிகளை பார்த்தால் அங்கு பான் இந்தியா என்கிற வார்த்தையை தான் அன்றே பயன்படுத்தி விட்டதாக பெருமையோடு கூறி இருக்கிறார்.

இந்த காரணத்தால் தான் தற்போது இருக்கும் நடிகைகளோடு தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று கூறியதாகவும் தனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பான் இந்திய அங்கீகாரம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் 10 வருஷத்துக்கு முன்னாடியே இது நடந்து விடுச்சு என்று ஸ்ருதிஹாசன் ஓபனாக பகிர்ந்த கருத்தை உண்மை என்று சொல்லி வருவதோடு அப்பாவைப் போல மிகவும் திறமைசாலியான நபராக இவர் விளங்குகிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam