திண்டுக்கல் சாரதி நடிகை கார்த்திகாவை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றனர். அதற்கு காரணம், அவர்களது அழகும், சிறந்த நடிப்பும்தான்.

அந்த வகையில் நடிகை கார்த்திகா, சொற்ப எண்ணிக்கையில் தமிழ் படங்களில் நடித்தவர். குறிப்பாக திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் மனைவியாக நடித்திருப்பார் கார்த்திகா.

வசந்தி (கார்த்திகா), மல்கோவா மாம்பழ கலரில் இருந்தாலும் கருப்பாக இருக்கும் பிரிண்டிங் பிரஸ் ஓனர் சாரதியை (கருணாஸ்), சந்தோஷமாக திருமணம் செய்துக்கொள்வார்.

ஆனால் தன் மனைவிக்கு ஏற்ற அழகில் தான் இல்லையே, என்று தாழ்வு மனப்பான்மையில் மனைவி மீது கணவன் சந்தேகப்படுவதுதான் படத்தின் கதை.

இந்த படத்தில் சாரதியாக கருணாஸ், வசந்தியாக கார்த்திகா தங்களது அழுத்தமான, திருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். அதனாலேயே இந்த படம், கார்த்திகாவுக்கு நல்ல அடையாளமாக இருக்கிறது.

இதுதவிர காசி, என் மன வானில், நம்நாடு, நாளை நமதே, பாலைவனச் சோலை, மகிழ்ச்சி உள்ளிட்ட படங்களிலும் கார்த்திகா நடித்திருக்கிறார்.

ஊமப்பெண்ணினு உரியடப்பையன், காட்டு செம்பாக்கம், மீசாமாதவன், புலிவால் கல்யாணம், மேல்விலாசம் சரியானு, வெள்ளி நட்சத்திரம், அபரிச்சித்தன் என பல மலையாள படங்களில் நடித்தவர் கார்த்திகா.

திண்டுக்கல் சாரதி

தமிழில், மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், திண்டுக்கல் சாரதி படம்தான் கார்த்திகாவுக்கு நல்ல அடையாளமாக இருக்கிறது. அதில்தான் அவர் பெயர் சொல்லும் படியான கேரக்டர் இருந்தது.

மற்ற படங்களில் அவரை ரசிகர்கள் கவனிக்கும்படியான கேரக்டர்கள் அவருக்கு அமையவில்லை. அதிலும் சில படங்களில் அவர் வந்து செல்லும் சின்ன ரோல்களில் மட்டுமே நடித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

கார்த்திகா

தமிழ், மலையாள படங்களில் நடித்த கார்த்திகா, மாடலிங் துறையில் இருந்ததால் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் மே மாதம் தனது காதலர் மேத்யூ என்பவரை கார்த்திகா திருமணம் செய்துக்கொண்டார். அவர் டாக்டர் என்பதால் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

இப்போது 3 பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கும் கார்த்திகா மேத்யூ புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அவரை ஞாபகம் வைத்துக்கொண்டு, அட நம்ம திண்டுக்கல் சாரதி படத்துல நடித்த கார்த்திகாவை பாருங்க, இப்பவும் எப்படி ஜம்முன்னு இருக்காங்க என, ஆச்சரியமாக கூறுகின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *