நடிகர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாய் வழியாக வாழ்த்துக்களை கூறினாலும் தங்களுடைய கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்பதை விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மாற்றம் தரும் தேர்தலாக இருக்குமா..? அல்லது வழக்கம் போல இருக்குமா..? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
கண்டிப்பாக கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் மிகுந்த கவனம் பெற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழக அரசியல் மீது பார்வையை திருப்பி இருக்கிறது.
கடந்த 70 வருடங்களாக இந்த கட்சி இல்லை என்றால் அந்த கட்சி.. அந்த கட்சி இல்லை என்றால் இந்த கட்சி.. இப்படித்தான் ஆட்சிகள் மாறி மாறி இருந்திருக்கின்றன. முதன்முறையாக நடிகர் விஜய் தனக்கே உரிய மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் மட்டுமில்லாமல் பெரும்பாலான பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற முகமும் நடிகர் விஜய்க்கு இருக்கிறது.
மட்டுமில்லாமல் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை நன்கு அறிந்த ஒரு முகமாக இருக்கிறார். தமிழக சினிமா தமிழக அரசியல் வரலாற்றை பார்த்தோம் என்றால் ஒரு கட்சி என்பது கொள்கை கோட்பாடு இது எல்லாம் தாண்டி அந்த கட்சியினுடைய தலைவரின் ஈர்ப்பு அந்த தலைவரிடம் இருக்கக்கூடிய ஒரு காந்த தன்மை இதுதான் அந்த அரசியல் கட்சியின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் காரணியாக இருந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முன்பதாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தனக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அப்படியே வாக்காக மாற்றினார். தனக்கு ரசிகர்கள் இருந்தாலும் கூட எம்ஜிஆர் என்றாலே ஒரு ஈர்ப்பு ஒரு பரபரப்பு ஒரு காந்த தன்மை இருந்தது.
எம்ஜிஆர் ஒரு இடத்திற்கு வருகிறார்.. ஒரு மாநாடு நடக்கிறது என்றால்.. ஒரு வாரம்.. நான்கு நாட்களுக்கு முன்பே அந்த மாநாடு நடக்கும் இடத்திற்கு சென்று தங்கி இருந்து எம்ஜிஆர்யின் முகத்தை பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கிய ரசிகர்கள் ஏராளம்.
எம்ஜிஆருக்கு இருந்த மவுசில் ஒரு சதவீதம் கூட குறையாமல் நடிகர் விஜய் இருக்கிறார் நடிகர் விஜய் ஒரு மாவட்டத்தில் மாநாடு நடத்துகிறார் என்றால் இன்றைய தேதிக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் முதல் 30 லட்சம் ரசிகர்கள் எளிமையாக கூடுவார்கள் என்பதை பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் நபர்கள் கணித்திருக்கிறார்கள்.
அதிலும் நடிகர் விஜய்க்கு இருக்கக்கூடிய ரசிகர் பட்டாளம் 35 வயதுக்கு குறைவான ரசிகர் பட்டாளம் அதேபோல தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 35 வயதுக்கு குறைவானவர்கள் தான் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள்.
இப்படி நடிகர் விஜயின் அரசியல் நுழைவு என்பது பெரிய பெரிய அரசியல் தலைகளின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில், நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலில் வீழ்த்தி விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் சில கட்சியை சேர்ந்தவர்கள் என்று அரசல் புரசாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
நடிகர் விஜய்யை திரை பிரபலங்களை வைத்தே ஒரு காமெடியனாக சித்தரிக்கும் வேளையில் பிரபல அரசியல் கட்சி ஒன்று கோடிகளில் செலவு செய்து வருகிறது என்று கூறுகிறார்கள். இவை உண்மையா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
ஆனால், கோடம்பாக்கம் வட்டாரத்தில் மற்றும் அரசியல் நோக்கங்கள் வட்டாரத்தில் இப்படியான தகவல்கள் வாய் வழியாக தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜயகாந்தையும் இப்படித்தான் திரைத்துறையில் இருப்பவர்களை வைத்து ஒரு காமெடியனாக சித்தரித்தனர் சில அரசியல் கட்சியினர்.
தற்பொழுது அதேபோன்ற ஒரு சூழ்நிலையை நடிகர் விஜய்க்கு உருவாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய கொள்கை கோட்பாடு மற்றும் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றில் நுணுக்கமாக இருந்தாலும் கூட அவருக்கு இருந்த மதுப்பழக்கம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதனால் மிகப்பெரிய அளவில் அவருடைய வாக்கு வங்கி சரிந்தது. அப்போதும் கூட தன்னுடைய முதல் தேர்தலிலேயே பத்து சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
நடிகர் நடிகர் விஜய்யை காமெடியனாக்கி விட வேண்டும் என்ற முயற்சியில் ஒரு பக்கம் வேலை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை அரசியலுக்கே வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றெல்லாம் கூட நகர்வுகள் நடப்பதாக முனுமுனுக்கிறார்கள் அரசியல் வட்டாரங்கள்.
இதனை கடந்த சில தினங்களாக செய்தி ஊடகங்களில் சில திரை பிரபலங்கள் நடிகர் விஜய் குறித்து பேசக்கூடிய சில விஷயங்களை பார்த்தால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ..? என்று கூட தோன்றுகிறது.
வெளியில் பேசும்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி.. பொதுவாழ்க்கைக்கு வரவேற்கிறோம்… என்றெல்லாம் பேசும் அவர்கள் இப்படி அவர் அரசியலுக்கு வந்து விடக்கூடாது அப்படியே வந்தாலும் அவரை காமெடியனாக தான் மக்கள் பார்க்க வேண்டும் அல்லது தமிழக மக்கள் வெறுக்கக்கூடிய ஒரு கட்சி தான் விஜயை இயக்குகிறது என பட்டம் கட்டிவிட வேண்டும்.. என துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
நடிகர் விஜய் மற்றும் அவருடைய ரசிகர்கள் முற்றிலும் புதிய ஒரு துறைக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இவர்களுடைய பயணம் எப்படி இருக்க போகிறது…? என்பதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பார்க்கலாம்.
நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா..? அல்லது நடிகர் விஜய் காமெடியனாக சித்தரித்து விட வேண்டும்.. என்று முயற்சி செய்து கொண்டிருக்க கூடியவர்கள் வெற்றி பெறுவார்களா..? என்பதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெரிந்து கொள்ளலாம்.