1992 முதல் 2001 காலகட்டத்தில் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கஜோல் திருமணத்திற்கு பிறகும் 2006 இல் இருந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இவர் ஹிந்தி படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகளுக்கு தாயாக மாறி இருக்கிறார். நடிகை கஜோலின் தங்கையும் ஒரு திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கஜோல்..
தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை நடிகை கஜோல் வேலையில்லா பட்டதாரி படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். அதற்கு முன்பு பிரபுதேவா உடன் இணைந்து மின்சார கனவு படத்தில் சீறிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
மின்சார கனவு படத்தில் இவர் நடித்ததின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர். இதனை அடுத்து வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லியாக நடித்து தனது அசத்தலான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிடுவார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியஸ்களிலும் நடித்து வரக்கூடிய இவர் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகம் கூடியதின் காரணத்தால் மிகச்சிறந்த முறையில் வெயிட் லாஸ் செய்து தற்போது உடல் எடை குறைத்த நிலையில் பிட்டாக மாறி இருக்கிறார்.
உடலுறவை என்ஜாய் பண்றது இல்ல..
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சை மிகு கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகை அரசியலில் படிப்பறிவு இல்லாத தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.
அது குறித்து பதிலளிக்கையில் கல்வியின் முக்கியத்துவத்தை கூறத்தான் அப்படி பேசினேன் என்று பல்டி அடித்த நிலையில் தற்போது ஓப்பனாக கூறி இருக்கக்கூடிய விஷயங்கள் இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
இந்த ஓப்பன் டாக்கில் இளம் பெண்கள் பலரும் உடலுறவை என்ஜாய் பண்ணுவது இல்லை என்று கூறிய பேச்சானது தற்போது பலர் மத்தியிலும் பேசும் பொருளாகிவிட்டது.
அதுமட்டுமல்லாமல் உடலுறவு என்றாலே ஒரு அசிங்கமான விஷயம் என்ற பிம்பம் பெண்களுக்கு சிறு வயது முதல் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அப்படி கிடையாது அவர்கள் தங்கள் நண்பர்களுடன் உடலுறவு குறித்து வெளிப்படையாகவே பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் அப்படி செய்வது கிடையாது. சிறு வயது முதலில் உடலுறவு என்றாலே கூச்ச சுபாவத்துடன் ஒருவித மன நெருடலுடன் அணுகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே இளம் பெண்கள் உடலுறவு என்ஜாய் செய்வது கிடையாது என்று கூறிய நடிகை கஜோலின் பேச்சானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் பேசும் பொருள் ஆகிவிட்டது.
ஒரு வகையில் இவர் கூறுவது உண்மை தான் என்று பல ஆண் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டி இருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் நம் முன்னோர்கள் இலை மறைவு, காய் மறைவாக சில விஷயங்களை உணர்த்தி இருப்பதை யாரும் மறந்து விடக் கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இணையதளவாசிகள் அனைவருமே இது குறித்து பட்டிமன்றங்களை நடத்த ஆரம்பித்து விட்டார்கள். எனினும் பலரும் நடிகை கஜோலின் பேச்சுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.