விஜய் கட்சி தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி ஒரு பஞ்சாயத்தா….?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பொசிஷனில் இருப்பவர் நடிகர் விஜய். இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து, மற்றொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகர் விஜய். அதுதான் தனது கடைசி படமாக இருக்கும். அதன் பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்து விட்டார்.

கடந்த 2ம் தேதி, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

விஜய்

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்ததற்கு முக்கிய காரணம், எங்கள் கட்சியின் இலக்கு 2026ம் ஆண்டில் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தல்தான் என்றும் முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி விட்டார்.

தமிழக வெற்றி கழகம்

திமுக ஆட்சி காலத்தில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டி, குறிப்பாக மகளிர் உரிமத்தொகை விஷயத்தில் ஏமாற்றிய ஸ்டாலினை குற்றம் சாட்டி ஆட்சியை பிடித்துவிட அதிமுக திட்டம் வகுத்திருந்தது.

அதே வேளையில், தங்களது ஆட்சி காலத்தில் மகளிர் இலவச பஸ் பயணம், மகளிர் உரிம தொகை, வளர்ச்சி திட்டப் பணிகளை மக்களிடம் சொல்லி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக எண்ணியிருந்தது.

ஆனால் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அறிவித்து திமுக, அதிமுக கட்சிகளுக்கு நடுவே, சினிமா ஹீரோ விஜய், அரசியல் வில்லனாக விஜய் வந்து நிற்பார் என திமுக அதிமுக கட்சிகள் எதிர்பார்க்கவில்லை.

தமிழக வாழ்வுரிமை கழகம்

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் அறிவித்துள்ள தமிழக வெற்றி கழகத்தை TVK என குறிப்பிடக் கூடாது.

இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.

ஏனெனில் ஏற்கனவே எங்களது, தமிழக வாழ்வுரிமை கட்சியை TVK என்றுதான் குறிப்பிட்டு வருகிறோம். எங்கள் கட்சியை TVK என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம்.

விஜயின் கட்சி பெயரை TVK என வைத்தால், மக்களுக்கு குழப்பம் ஏற்படும். என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

பஞ்சாயத்து

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2ம் தேதி தான், நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்து, அறிக்கை வெளியிட்டார்.

ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கட்சி பெயரில் உள்ள டிவிகே என்ற எழுத்துக்களில் பஞ்சாயத்து வந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *