தோல் நோய்களை கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

தோல் நோய் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு இது வந்து விட்டதே என்று எண்ணி மருத்துவம் பார்க்காமல் விட்டு விட்டால் மன உளைச்சல்  தான் நமக்கு மிகுதியாக ஏற்படும். தோல் நோய் ஏற்பட்ட உடனேயே  அதற்கு  உரிய மருத்துவம் பார்க்க வேண்டும் இல்லை என்றால் அது மிகவும் மோசமாகி தோல் முழுவதும் பரவிவிடும். 

எனவே அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அழகு சாதன பொருட்களையும் கிரீம்களையும் பயன்படுத்தலாம் என்று முட்டாள்தனமாக முற்படுகையில் நமக்கு தேவையில்லாத பாதிப்புகள் தான் ஏற்படும். 

ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதற்கு தகுந்தாற்போல் நாம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தோல் நோய் குறிப்பாக பரம்பரை மற்றும் சத்து குறைபாடு காரணமாக ஏற்படலாம். 

நிவாரண வழிகள்

தேமல் வெண் தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு வைட்டமின் குறைபாடு காரணமாக கூறப்படுகிறது. ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் ஓரளவு நிவாரணம் பெறலாம். 

எலுமிச்சம்பழச் சாறு, முட்டைக்கோஸ் இலை சாறு இவற்றை நாம் தோல் பகுதிகளில் தேய்ப்பதன் மூலம் சொரி,சிரங்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

விட்டமின் பி 2 குறைபாடு  காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின்மி பி6 குறைபாட்டால் தேமல் ஏற்படுகிறது. நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். 

ரவை, சர்க்கரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் அதிக அளவில் தோல் நோய் பாதிக்கிறது. தோல் நோய்கள் வருவதற்கு மற்றோரு காரணம் ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும் .இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முழு தானியங்கள் உலர்ந்த பருப்புகள் பழங்கள் மற்றும் காய்கள் பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சரும நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …