லால் சலாம் தோல்விக்கு இவங்க தான் காரணம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போ யாரை சொல்லியிருக்காங்கன்னு பாருங்க..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2 மகள்கள். அதில் மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு திரைப்பட இயக்கம் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் நடிகர் தனுஷை திருமணம் செய்த பிறகு, அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

அப்போது டைரக்‌ஷன் பணிகளை செல்வராகவனிடம் இருந்து கற்றுக்கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் தனுஷ் – ஸ்திருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தனுஷின் பள்ளி நண்பனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இரண்டு படங்களுமே பிளாப்

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தது. அதன்பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் கவுதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து, வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.

அந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. இப்படி இரண்டு படங்களுமே பிளாப் ஆனதால், சில ஆண்டுகள் திரைப்பட இயக்கம் குறித்து ஆர்வம் இல்லாமல் ஐஸ்வர்யா இருந்தார்.

இந்த சூழலில், கணவர் தனுஷை விட்டுப் பிரிந்திருந்த ஐஸ்வர்யா, மீண்டும் டைரக்‌ஷஷன் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

அதிக பொருட்செலவில்…

கேமியோ ரோலில், லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டதால், லைக்கா புரடக்சன் நிறுவனமும் லால் சலாம் படத்தை தயாரிக்க அதிக பொருட்செலவில் தயாரிக்க முன்வந்தது.

இதில் ஏஆர் ரகுமான் இசை என்க படத்துக்கு இன்னும் வெயிட் அதிகரித்தது. படத்தில் முதன்மை கேரக்டரில் முதலில் அதர்வா, விக்ராந்த் நடிக்க இருந்த நிலையில், அதர்வாவுக்கு பதில் விஷ்ணு விஷால் மாற்றப்பட்டார்.

ரஜினிகாந்த், லைக்கா புரடக்சன், இசை ஏஆர் ரகுமான் என பெரிய கூட்டணியில் வெளியான இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களே ஆர்வம் காட்டவில்லை.

காலியான கூட்டம்

இந்த படம் வெளியான அன்று, ஒரு தியேட்டரில் கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. 2ம் நாளிலேயே பல தியேட்டர்களில் காலியான சேர்களையே காண முடிந்தது. காளியோட ஆட்டம், காலியான கூட்டம் என சமூக வலைதளங்களில் கலாய்த்திருந்தனர்.

படம் வெளியான பத்து நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 10 கோடி, மொத்தமாக ரூ. 29 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து படம் பிளாப் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளரிடம் புகார்

இந்நிலையில் லால் சலாம் படம் சரியாக போகாததற்கு காரணம், வெற்றி பெறாமல் பிளாப் ஆக காரணம், லைகா புரடக்சன் சார்ந்த முக்கிய அதிகாரிகள், இந்த படத்தை சரியாக பிரமோசன் செய்ய தவறிவிட்டனர்.

லால் சலாம் படம் குறித்த விளம்பரம், மக்கள் மத்தியில் சரியாக சென்று சேரவில்லை என, படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லைகா புரடக்சன் தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் போனில் அழைத்து புகார் கூறியிருக்கிறார்.

அவரும் சென்னையில் உள்ள லைகா புரடக்சன் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை அழைத்து கண்டித்து இருக்கிறார்.

ரசிகர்களே பிரமோசன் பண்ணியிருப்பாங்க…

லால் சலாம் தோல்விக்கு, சரியாக பிரமோசன் செய்யாத லைகா புரடக்சன் சார்ந்த நிர்வாகிகள் தான் காரணம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் சொல்லியிருப்பது பலரையும் அதிருப்தியடைய செய்திருக்கிறது.

‘படம் நல்லா இருந்தா, ரசிகர்களே பிரமோசன் பண்ணியிருப்பாங்க, அது இந்த டைரக்டருக்கு புரியலையே,’ என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கிண்டலடித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam