சென்னையைச் சேர்ந்த ஆர் ஜே பாலாஜி வானொலி ஒளிபரப்பாளராக திகழ்ந்து இருக்கிறார். இவர் பூர்வீகம் ராஜஸ்தான். வானொலி மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுப்பாளராகவும் திகழ்ந்த இவர் இதனை அடுத்து நடிகர் என்ற அந்தஸ்தையும் அடைந்தார்.
பன்முகத் திறமையை கொண்டிருக்கக் கூடிய இவர் திரைப்படங்களில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் இருப்பவர்.
ஆர் ஜே பாலாஜி..
ஆர் ஜே பாலாஜி பிக் எஃப் எம் 92.7 பணியாற்றியவர் இதனை அடுத்து இவர் ஒரு சில திரைப்படங்களுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக 2013 ஆம் ஆண்டு வெளி வந்த புத்தகம் என்ற படத்தில் இவர் டப்பிங் செய்திருப்பது பலருக்கும் தெரியும்.
இதனை அடுத்து இவர் அதே ஆண்டு வெளி வந்த எதிர்நீச்சல் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தீயாய் வேலை செய்யணும் குமாரு படத்தில் இவர் செய்த கேரக்டர் பலர் மத்தியிலும் பேமஸ் ஆகி நல்ல ரீச்சை கொடுத்தது.
இதனை அடுத்து இவர் வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதை அடுத்து காமெடியன் அல்லாமல் ஹீரோவாக கூடிய வாய்ப்பு கிடைத்து. எனவே ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதுதான் சினிமாவா..
இந்நிலையில் அண்மை பேட்டியில் ஆர் ஜே பாலாஜி சினிமாவைப் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதில் ஆச்சரியத்தை தரக்கூடிய விஷயங்கள் நிறைந்துள்ளது என்று கூறலாம்.
இதையும் படிங்க: என் புருஷன் இதை விரும்பி குடிப்பாரு.. வெக்கமே இல்லாமல் பொதுவெளியில் கூறிய கிகி விஜய்..!
ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்த போது இவர் சுந்தர் சி மற்றும் நடிகர் சித்தாத்தோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவாராம். இதைப் பார்த்த சில நீங்கள் அவர்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. அவர்களை சார் என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டித்து இருக்கிறார்கள்.
எனினும் சித்தார்த்தோ அல்லது சுந்தர் சி எந்த வித வேறுபாடும் பார்க்காமல் பாலாஜியோடு பழகிய தருணத்தில் பலரும் இவரை இவ்வாறு கூறியதை அடுத்து என்ன வாடா போடான்னு பேசக்கூடாதா.. சார்.. என்ன உங்கள சார்னு கூப்பிட சொல்றாங்க இது தான் சினிமாவா? என்று அவர்களிடமே கேட்டு விட்டார்.
அதற்கு சுந்தர் சி அப்படியெல்லாம் ஏதுமில்லை. அவர் அந்த காலத்து ஆள் அதனால் தான் அவரை அப்படியே விட்டு விட்டோம். நீங்கள் எல்லாம் அப்படி இல்லை என்று கூறி வழக்கம் போல அவர்களது பாணியில் பழக ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிகழ்வைத் தான் தற்போது இவர் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அடுத்து தொழில் செய்யும் இடத்தில் நண்பர்களாக பழகுவதின் மூலம் எதையும் எளிதில் பரிமாறி கொள்வதோடு மட்டுமல்லாமல் ஓப்பனாக எல்லா விஷயங்களையும் பேசி சரி செய்ய முடியும். அது தெரியாமல் மரியாதை என்ற பெயரில் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்வது மூலம் பல விஷயங்களை விளக்க நேரிடுகிறது என்பது தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
எனவே ஆர் ஜே பாலாஜி பகிர்ந்து இருக்கக்கூடிய இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களும் இதனை ஒரு பேசும் பொருளாக்கி தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் ‘மதுர’ பட ஹீரோயினை நியாபகம் இருக்கா..? தளுக் மொழுக்குன்னு ஆளே மாறிட்டாங்களே!
மேலும் மரியாதை என்பது மனதில் இருந்தால் போதும் நட்போடு பழகும் போதும் எல்லாவற்றையும் எளிதாக நாம் கையாள முடியும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.