சினிமாவில் சில நடிகர்கள் சில காட்சிகளில் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுவர்.
ஏனெனில் அது அவர்கள் நடித்த முதல் படமாக இருந்தாலும், அவர்கள் காமெடி ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக நின்றுவிடும்.
அப்படிதான் பரோட்டா சாப்பிடும் சவாலில், ரசிகர்களின் மனதில் நின்ற சூரி இன்று பல கோடி ரூபாய் சம்பளம் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.
அதை போல், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரையும் மறக்கவே முடியாது. இந்த படத்தில் சேவல் பண்ணை என்ற அந்த பேச்சுலர் மேன்சனில் சூரியும் இருப்பார்.
டுபாக்கூர் சினிமா டைரக்டர்
அந்த படத்தில் டுபாக்கூர் சினிமா டைரக்டராக, மேன்சன் ரூமில் தங்கியிருக்கும் கேரக்டரில் நடித்தவர்தான் நடிகர் சரவணன். காதல் படத்தில் நடித்த பிறகு காதல் சரவணன் என அழைக்கப்படுகிறார்.
அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் காதல் சரவணன் நடித்தாலும் இன்று வரை, அவரை சட்டென அடையாளம் காட்டுவது அந்த காதல் பட டுபாக்கூர் டைரக்டர் கேரக்டர்தான்.
இதையும் படியுங்கள்: தியேட்டர் கார்னர் சீட்டில்.. காதலனுக்கு இதை செய்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை அமலா பால்..
காதல் சரவணன்
சமீபத்தில் காதல் சரவணன் கலந்துக்கொண்ட ஒரு நேர்காணலில் நடிகர் வடிவேலு குறித்து கூறியதாவது,
மருதமலை படத்தில், நடிகர் வடிவேலு மூலமாக நான் நடிக்கவில்லை. டைரக்டர் சுராஜ் தான் அந்த சீனில் நடிக்க என்னை கூப்பிட்டார்.
நடிக்க விடமாட்டேங்கிறார்…
அப்புறம் ஒருமுறை கடைசியாக சுராஜ் என்னை கூப்பிடும்போது, வடிவேலு உங்களை நடிக்க விட மாட்டேங்கிறார். அவருக்கு அவர் குரூப்ல இருக்கிற ஆள் தவிர்த்து, வேற ஆள் வந்தா அவருக்கு பிடிக்காது.
ஆனால் இந்த சீன் நீங்க பண்ணினால் நல்லா இருக்கும், என்று அவர் சொன்னார். அதனால் நீங்க நாளை காலையில் ஒரு நாலு மணிக்கு கிளம்பிடுங்க என்றார்.
இதையும் படியுங்கள்: படப்பிடிப்பில் அஜித்திடம் இதை மட்டும் பண்ணவே கூடாது.. அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.. இயக்குனர் ராஜகுமாரன்..
ஏன் சார், எதாவது சன் ரைஸ் சீன் வைக்கப் போறீங்களா அப்படீன்னு கேட்டேன். இல்லே இல்லே நான் சொல்றேன் வாங்க என்றார். காலையில் 6 மணிக்கு எல்லாம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.
11 மணிக்குதான் வருவாரு…
ஏன்னா வடிவேல் 11 மணிக்கு தான் வருவாரு. ஆறு மணியில் இருந்து நான் நடிக்கிற போர்ஷன் பூராவும் எடுத்தாச்சு. அப்புறம் 11 மணிக்கு அவர் வர்றார். அவர் சொன்ன மாதிரியே ஒரு ஆளை கூட்டீட்டு வந்தார். அப்புறம் டைரக்டர் எப்படியோ சொல்லி சமாளிச்சுட்டார்.
அப்படித்தான், டைரக்டரே நினைச்சாலும் கூட வடிவேலு மத்த நடிகர்களை நடிக்கவே விட மாட்டான்.. மனுஷனே கிடையாது என்று இந்த நேர்காணலில் நடிகர் காதல் சரவணன் விளாசி இருக்கிறார்.