நான் செய்தி வாசிக்கும் போதே… அவருடைய மரணம்.. அடுத்த நிமிஷமே இதை எடுத்து வச்சேன்.. நிர்மலா பெரியசாமி..

செய்தி வாசிப்பாளர்களின் சிலரது கம்பீரமான, கணீர் என்ற குரலை மறக்கவே முடியாது. வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமியை போல, நிர்மலா பெரியசாமியின் குரல் வெகு பிரசித்தமானது.

அவரது குரலில் செய்திகளை உச்சரிக்கும்போது, ஒவ்வொரு செய்தியும் மனசில் தங்கும்படியான ஒரு தொனியில் மிக சிறப்பாக அந்த செய்திகளை வாசிப்பார்.

நிர்மலா பெரியசாமி

கரூரைச் சேர்ந்த நிர்மலா, பெரியசாமி என்ற பிஎஸ்என்எல் ஊழியரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு விக்னேஷ் என்ற மகன் இருக்கிறார்.

முதலில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணிசெய்த நிர்மலா பெரியசாமி, பின்பு சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சியில் 7 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை, தொகுத்தும் வழங்கினார்.

ஜெயலலிதா முன்னிலையில்

கடந்த 2003ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் நிர்மலா பெரியசாமி இணைந்தார். இவருடன் பிரபலமான மற்றொரு செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக நிர்மலா பெரியசாமி இருந்தார். கட்சி செய்தி தொடர்பாளராகவும் பணிசெய்தார்.

இதையும் படியுங்கள்:  பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..

ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது, ஓ பன்னீர்செல்வம் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுக்கு நூறாக்கி விடும்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட நிர்மலா பெரியசாமி கூறியதாவது, துவக்கத்தில் செய்தி வாசிப்பாளர் பணியை நான் மிகவும் ஆசைப்பட்டு விரும்பிதான் செய்தேன். ஆனால் சில நேரங்களில் சோகமான செய்திகள், மனதை உடைத்து சுக்குநூறாக்கி விடும்.

இதையும் படியுங்கள்:  சித்தார்த் செய்த தரமான சம்பவம் – கோடி ரூபா கொடுத்தும் வேலைக்கு ஆகல..

சிவாஜி கணேசன் இறந்த செய்தி

நடிகர் சிவாஜி கணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் இறந்த செய்தியை நான் படிக்க வேண்டிய நிலைமை வந்தது. அப்போது லைவ் ரெக்கார்டு கிடையாது. கட் சொல்லி தான் ஒவ்வொரு செய்தியாக படிக்க வேண்டும்.

திடீரென சிவாஜி கணேசன் இறந்த செய்தி வந்துவிட்டது. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஏற்கனவே இரண்டு, மூன்று செய்திகைள படித்துவிட்டேன். இப்போது சிவாஜி மறைவு செய்தியை படிக்க வேண்டும்.

பூவை மட்டும் எடுத்து…

ஆனால் அன்று விதவிதமான அலங்காரத்தில் இருக்கிறேன். அது எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது.

அதனால் தலையில் இருந்த பூவை மட்டும் எடுத்து வைத்துவிட்டு, செய்தியை படித்து முடித்தேன்.

இதே போல் சில விபத்து செய்திகளை படிக்கும் போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார் நிர்மலா பெரியசாமி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam