கூவத்தூர் திரிஷா சீரியஸ்.. சின்மயி உடைத்த ரகசியம்.. விவகாரம் பெருசா பெருசா இருக்கே..

சமீபத்தில் கூவத்தூரில் நட்சத்திர சொகுசு விடுதியில், கடந்த 2017ம் ஆண்டில் நடந்த சம்பவமாக, அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் பேசிய விவகாரம் பெரிய விஸ்வரூபம் எடுத்தது.

திரிஷா

அதில் நடிகை திரிஷா, நடிகர் கருணாஸ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றதால் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தமிழ் சினிமா துறை தரப்பில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியதால், அந்த நிர்வாகி நான் அப்படி பேசவில்லை என்று மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

கடந்த 2018ல் மீ டூ விவகாரத்தில் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை சொன்ன போது, போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் சொல்வியா, என்று கேட்ட கேவலமாக பிறவிங்க தான் நீங்க.

இதையும் படியுங்கள்:  இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

சமூக நீதி

கலாச்சாரம், பெண்ணியம், சமூக நீதின்னு பேச்சு மட்டும் வாய் கிழியுமே தவிர, அரசியல்வாதிங்க பெண்களை பத்தி எப்படி பேசறாங்கன்னு டிரான்ஸ்லேட் பண்ணி உலகத்துக்கு காட்டணும். நாறிடும்.

ஊருக்கே தெரிஞ்ச பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டினால், இங்குள்ள ஆளுங்களின் ஆதங்கமே நமக்கு அந்தஸ்து, பதவி, பண பலம் இருந்திருந்தா நாமும் சில பெண்களை ரேப் பண்ணியிருக்கலாமே என்பதுதான்.

மகுடம் சூட்டி…

ஆனா இந்த மாதிரி கெட்ட புத்தி உள்ள இவங்கதான் ஒழுங்கு, மட்டை, மண்ணாங்கட்டின்னு மேடையில் ஸ்பீச் கொடுப்பாங்க. அதே ஆட்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு மகுடம் சூட்டி கொண்டாடினாங்க.

குற்றம் சாட்டி பெண்களை ஏண்டி உயிரோடு இருக்கறே, இன்னும் சாகலையான்னு கேட்டாங்க. ஏண்டி இப்ப சொன்னே, அப்பவே சொல்லலைன்னு இந்த ஊர் பெரியவங்க, கெட்ட எண்ணம் கொண்டவர்கள் கேட்பாங்க.

ரேப் கல்ச்சர்ல உருவானவங்க தான் இந்த ஊர்ல பாலியல் குற்றங்களுக்கு துணை போனவங்களுக்குதான் ஆதரவா இருக்காங்க. இதுதான் இங்க கலாச்சாரம்.

இதையும் படியுங்கள்:  நான் அம்மாவா இருக்கிறதால.. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லையா.. விக்கி மட்டும் தான் அப்பாவா..?

சகஜமாக நடக்கும்

கருணாஸ் அந்த டைம்ல கொடுத்த பேட்டியில் ஆமா அத்தனை பேரும் அப்படித்தான். அதுக்கென்ன இப்போ அப்படீன்னு பேட்டி கொடுத்தவர்தான். இப்படிப்பட்ட மகான்கள் இருக்கும்போது சமுதாயத்தில் பெண்களுக்கு பாலியல் குற்றங்கள்தான் சகஜமாக நடக்கும்.

பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் கலாசாரம் இன்னும் ரேப் பண்ணு, நான் துணை நிற்கிறேன் அப்படீன்னு கலாசாரம்தான் இருக்கு.

கூண்டோ அழியணும்

இப்போ போகிற போக்குல என்ன வேணாலும் சொல்லீட்டு போலாமுன்னு சொல்லீட்டு போறார் ஒரு அரசியல்வாதி. கேட்பார் யாருமில்லை. எப்பவும் குற்றம் சாட்டப்பட்டவன் அவங்களோட ஆளுங்க நான் கம்முன்னு இருப்பாங்க.

இப்படிப்பட்ட பெண்களை துன்புறுத்துகிற, கொடுமைப்படுத்துகிற பிறவிங்க வேரோட, கூண்டோட அழியணும். நோய்வாய்ப்பட்டு கதறி கதறி அழுது சாக வேண்டும் என்று பேசியிருக்கிறார் பாடகி சின்மயி. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam