மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், நீங்கள் கேட்டவை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து 1980களில் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தவர் நடிகர் தியாகராஜன். அவரது மகன்தான் நடிகர் பிரசாந்த்.
பிரசாந்த்
நடிகர் பிரசாந்த், கடந்த 1990களில் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு என்ற படம் மூலம், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். குமரேன் என்ற பெயரில் அந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்தார்.
ஊர் பெரியவர் அம்பலவாணன் மகளை காதலிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் தேவாவின் தேனிசையில் பாடல்களும், ஜனகராஜ் காமெடியும், கதாபாத்திரங்களின் அபரிமிதமான நடிப்பும் படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைத்தது.
வண்ண வண்ண பூக்கள்
தொடர்ந்து பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வண்ணவண்ண பூக்கள், மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடி, ஆர் கே செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாக பிரசாந்துக்கு அமைந்தது.
தொடர்ந்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், அடுத்து கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஆணழகன் போன்ற பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக பிரசாந்த் வலம் வந்தார்.
இதையும் படியுங்கள்: சூர்யாவா இருந்தா என்ன..? கேட்டதை வைங்க.. ராஷ்மிகா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. அடி ஆத்தி..
பெண் ரசிகைகள்
நடிகர் பிரசாந்துக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். அதனால் அவரது படங்களுக்கு கல்லூரி மாணவியர், பள்ளி மாணவியர் கூட்டம் மிக அதிகமாக வரும். ஆண் ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு ஹீரோயிசம் நிறைந்த நடிகராகவே பிரசாந்த் இருந்தார்.
ஆனால் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார். கிரஹலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமாகி பல மாதங்களுக்கு பின்புதான், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்தது.
இமேஜ் டேமேஜ் ஆனது
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் போலீஸ் கேஸ், கோர்ட், வழக்கு விசாரணை என வந்ததால் பிரசாந்த் இமேஜ் டேமேஜ் ஆனது. படங்களில் நடிப்பதும் வெகுவாக குறைந்து போனது. அதற்கு பின் அவர் நடித்த வின்னர், பொன்னர் சங்கர் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை.
அவரது குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்திருந்தால் விஜய், அஜீத் ரேஞ்சில் தமிழ் சினிமாவில் பிரசாந்த் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட்பிரபு இயக்கத்தில்…
அதனால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த பிரசாந்த் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், GOAT என்ற படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் பிரசாந்த், நான் விஜய் படத்தில் நடிக்கவில்லை. விஜயுடன் இந்த படத்தில் நடிக்கிறேன், என்று கெத்தாக கூறிவிட்டுச் சென்றார்.
விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை
தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களை பிரசாந்த் சந்தித்த போது, உங்கள் நண்பர் விஜய் என ஒரு நிருபர் கேள்வி கேட்க முற்பட்ட போது, விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை. சகோதரன் என்று சொல்லுங்கள் என்றார். விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்ட போது, இரண்டு பேர் தனியாக பேசிக் கொண்டதை, பொதுவெளியில் எப்படி சொல்ல முடியும்? அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படியுங்கள்: இனிமே கல்யாணத்தை பத்தி கேள்வி கேப்பீங்க.. சிம்புவின் வீடியோவை பகிர்ந்த பிரேம்ஜி..!
ஒரே போடு போட்டது
என்னது விஜய் என் நண்பரா..? ஹலோ.. அப்டி சொல்றது தப்பு, சகோதரன் என்று சொல்லுங்க ” என்று டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரே போடு போட்டது, வைரலாகி விட்டது.