கோழி பிரியாணி.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவு பிரியாணி. அதிலும் அசைவ பிரியாணி, குறிப்பாக கோழி பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கோழி பிரியாணி செய்ய கூடிய வழிமுறைகளை இனி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 

  1. பாசுமதி அரிசி ஒரு கிலோ 
  2. கோழிக்கறி முக்கால் கிலோ 
  3. பெரிய வெங்காயம் கால் கிலோ தக்காளி -150 கிராம்
  4.  தேங்காய்ப்பால் சேர்ப்பதென்றால் முற்றிய தேங்காய் 1
  5. நெய் -300 கிராம் 
  6. தயிர்- 100 கிராம்
  7. பொதினா,கொத்தமல்லித்தழை,கருவேப்பிலை சிறிதளவு.

மசாலா அரைக்க 

  1. புதினா இலை – 1 கைப்பிடி அளவு பச்சை மிளகாய் -4 
  2.  மிளகு 2 ஸ்பூன் 
  3. சீரகம் 1 ஸ்பூன் 
  4. சோம்பு 2 ஸ்பூன் 
  5. பட்டை 4 
  6. கிராம்பு 4 
  7. இஞ்சி 100 கிராம் 
  8. பூண்டு 100 கிராம் 
  9. சின்ன வெங்காயம் 150 கிராம் 
  10. மிளகாய் தூள் சிறிது 
  11. மஞ்சள் தூள் சிறிது
  12.  உப்பு 
  13. எண்ணெய் தேவையான அளவு.

தாளிக்க 

புதினா இலை, கறிவேப்பிலை, மல்லி, முந்திரி பருப்பு தலா 50 கிராம்.

செய்முறை 

மசாலா ஜாமான் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். பின் தேங்காய் பால் ஊற்றுவது என்றால் பால் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மசாலா சாமானுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பாசுமதி அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து, பிறகு தண்ணீர் ஊற்றி 10 அல்லது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிரியாணி செய்வதற்கு முன் அரிசியை பக்குவப்படுத்தி விட்டு தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க சாமான்களை போட்டு கிளறி புதினா இலை, கருவேப்பிலை போட்டு முந்திரியையும் போடவும். பிறகு இதில் நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி கறியை போட்டு நன்றாக கிளறி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தயிரையும் சேர்த்து கறி நன்றாக வதங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு கிளறி ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு மூடி வைக்க வேண்டும்.

கறியும், அரிசியும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் நெய்யில் சேர்த்து கிளறவும் இளம் தீயில் வேகவிடவும். தேங்காய் பால் சேர்ப்பது என்றால் தேங்காய் பாலுடன் தண்ணீர் அளவை சேர்க்கவும். பிரியாணி தயாரானவுடன் இறக்கி வைத்து எலுமிச்சை பழம் பிழிந்து நெய் சேர்த்து கிளறி புதினா, கொத்தமல்லியை தூவி விடவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …