நாடு முழுவதுமே தற்போது புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து ஒரு மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என சொல்லலாம்.
இதையும் படிங்க: நான் பிரபுவை தான் காதலிக்கிறேன்.. இந்த ஜென்மத்துல அவரோட.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா..!
இந்த சம்பவத்தால் புதுச்சேரியே பரபரப்பாக தற்போது இருப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரி சிறுமி விவகாரம்..
புதுச்சேரியில் இருக்கும் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயது 9. இவர் கடந்த இரண்டாம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சிறுமி காணாமல் போய்விட்டார்.
சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த சிறுமையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமையை தீவிரமாக தேடி வந்தார்கள்.
மேலும் அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் சிறுமி கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் வீடு, வீடாக சோதனை செய்தனர்.
எனினும் சிறுமி பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சிலரை கைது செய்து விசாரணை செய்தும் போதிய அளவு விவரங்கள் கிடைக்காததை அடுத்து சிறுமியின் பெற்றோர் தனது பெண்ணை விரைவில் மீட்டு தர வேண்டும் எனக் கூறி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
கைது செய்யப்பட்ட நபரின் வயது..
இந்த நிலையில் அந்தத் தொகுதி எம்எல்ஏ பிரகாஷ் குமாரும் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து சிறுமியை விரைந்து கண்டுபிடிக்க போலீசார் முயற்சி செய்தார்கள்.
இதனை அடுத்து சோலை நகர் பகுதியில் அம்பேத்கார் வீதி கண்ணதாசன் வீதிக்கு இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரும் அது தங்களது மகள் தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் திரண்டனர்.
மேலும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் மூவரை கைது செய்து விசாரணை நடைபெற்ற நிலையில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நாட்டை உலுக்கிய சம்பவம்..
நாட்டை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் விவேகானந்தன் 54 வயது மற்றும் கருணாஸ் 19 வயது உடையவர்கள் என்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..
இந்த இரண்டு நபர்களும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து உடற்கூறு ஆய்வு தற்போது நடந்து வருவதை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது இந்த கொலைக்கு வேறு ஏதேனும் முகாந்திரம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணையில் முடுக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.
இதனை அடுத்து பொதுமக்கள் அனைவருமே இது போன்ற பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வருவதோடு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். மீண்டும் இது போல தவறு நிகழாத வண்ணம் இருக்க அது உதவி செய்யும் என்பது போன்ற வகைகளில் பேசி வருகிறார்கள்