சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் ஏ ஆர் முருகதாஸ் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

முதன்முதலில் நடிகர் அஜித் வைத்து தீனா திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் அடிக்கவே தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தார் ஏ ஆர் முருகதாஸ்.

இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்!

இதனால் ஏ ஆர் முருகதாஸின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டது. இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சினிமா பக்கம் மிகவும் ஆர்வம் அதிகரித்ததாம்.

பிரபலமான நடிகர்களை போல குரலைகளை மாற்றி பேசுவது அதுமட்டுமில்லாமல் கல்லூரி படிக்கும்போதே சிறுகதைகள் நாவல்கள் எழுதுவதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.

அதன் பின்னர் தன்னுடைய நண்பர்களை ஊக்கப்படுத்தியதால் அதன் மூலம் சினிமாவில் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இதையும் படியுங்கள்: ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…!

எஸ். ஜெ சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி கலை நுணுக்கங்களை கற்றுத் தெரிந்த பின்னர் இயக்குனராக சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

குறைப்பாக சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இலக்கி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார்.

இதனால் சூர்யாவின் சினிமா கெரியரும் உச்சத்தில் உயர்ந்தது. மேலும் கஜினி படத்தை ஹிந்தியில் அமீர் கானை வைத்து இயக்கி அங்கேயும் தனது வெற்றி கண்டார்.

இதன் மூலம் பாலிவுட்டிலும் தனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டார். ஏ ஆர் முருகதாஸ் தொடர்ந்து விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை எடுத்து ஹிட் அடிக்கவே அந்த படத்தையும் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்தார்.

அதன் பின்னர் விஜய் தானாக வந்து தனக்கு கால்ஷீட் கொடுக்க கத்தி திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் மெகாஹிட் அடிக்க பிரம்மாண்ட வெற்றியை கண்டார்.

இதையும் படியுங்கள்: ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…!

அதை தொடர்ந்து ரஜினியுடன் தர்பார் திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.

அதை அடுத்து தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் வைத்து இயக்கி இருந்தார். அந்த படமும் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து டோலிவுட் பக்கமே தலை காட்ட முடியாத அளவுக்கு ஆகிவிட்டார்.

அந்த சமயத்தில் ஏ.ஆர் முருகதாஸிற்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தை சன் டிவி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் தர்பார் படம் வெளிவந்த நேரம், ஸ்பைடர் படம் தோல்வியடைந்த நேரம் என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் முருகதாஸின் சம்பளத்தை குறைத்து பேசி உள்ளது சன் பிக்சர்ஸ்.

இதையும் படியுங்கள்: அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

உங்களது தகுதிக்கு இது இப்போதைக்கு போதும் என குறைத்து சம்பளம் பேசப்பட்டதால் கடும் கோபம் அடைந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தை இயக்கவே முடியாது என விஜய் படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம்.

ஒருவேளை வறட்டு கௌரவத்தை பார்க்காமல் அந்த படத்தை இயக்கியிருந்தால் நிச்சயம் அவர் மீண்டும் ஒரு ஹிட் கொடுத்து இந்நேரம் விட்ட இடத்தை பிடித்திருப்பார் என முணுமுணுக்கிறது கோலிவுட் திரையுலகம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam