மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

கடந்த மாதம் 22ம் தேதி வெளியான மலையாள படம் மஞ்சும்மெல் பாய்ஸ். கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மஞ்சும்மெல் பாய்ஸ்

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் படம், படம் ரிலீஸ் ஆன 15 நாட்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது.

மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் கதை என்னவென்றால், எர்ணாகுளம் பகுதியில் இருந்து 12 பேர்கள் அடங்கிய நண்பர்கள் கூட்டம், கொடைக்கானலுக்கு டூர் வருகிறது. வந்த இடத்தில் குணா குகை படம் பார்க்க விரும்புகின்றனர்.

அங்கு செல்லும் நண்பர்கள், தடை மீறி ஆபத்தான பகுதிக்குள் சென்று கொண்டாட்டம் போடும் போது, அந்த நண்பர்களில் ஒருவர் அதல பாதாள சுரங்கத்துக்குள் விழுந்து விடுகிறார்.

அவரை, அந்த நண்பர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரே தன் உயிரை பொருட்படுத்தாமல் அந்த ஆபத்தான சுரங்கத்துக்குள் கயிறு கட்டி இறங்கி, மேலே உயிருடன் மீட்டு வருகிறார் என்பதுதான்.

உண்மையில் நடந்த சம்பவம்

இது உண்மையில் 2006ம் ஆண்டில் நடந்த சம்பவம். இதில் குணா குகை என்பதால், குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம்பெற்று, படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது.

இதையும் படியுங்கள்: இதுக்காக வேணா விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. பிக்பாஸ் சரவணன் ஒரே போடு..

சிதம்பரம்

அந்த வகையில், இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மிகப்பெரிய இயக்குநராக ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். அப்போது குணா படம் வெளிவந்து 33 ஆண்டுகளாகிறது. எனக்கும் வயது 33 தான் ஆகிறது என்று சொல்லியிருக்கிறார்.

வடிவேலு

சமீபத்திய ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை அடுத்து நடிகர் வடிவேலுவை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடைய காமெடி காட்சிகளை விரும்பி பார்ப்பேன் என்றும் கூறியிருந்தார் இயக்குனர் சிதம்பரம்.

இந்நிலையில், அது ஏன் மஞ்சும்மெல் பாய்ஸ் என படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்கு மஞ்சும்மெல் கேர்ள்ஸ் என பெயர் வைத்திருக்க கூடாதா என சமூக வலைதளங்களில் சில பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதையும் படியுங்கள்:அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

பிராப்தி எலிசபெத்

இயக்குநர் சிதம்பரம் இயக்கிய முதல் படமான ஜான் ஈ மேன் என்ற படத்தில் நடித்த நடிகை பிராப்தி எலிசபெத் அதற்கு பதிலளித்துள்ள நிலையில், இயக்குனர் சிதம்பரம் குறித்து பல அதிர்ச்சிக்கரமான புகார்களையும் கூறியிருக்கிறார்.

வாட்ஸ் அப்பில் தனியாக குரூப் வைத்துள்ள அவர் மோசமாக மெசேஜ் செய்வார், அவரது படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான டார்ச்சர் குறித்தும் அவர் பதிவிட, பெரிய சர்ச்சையாக அது மாறியுள்ளது.

MeToo குற்றச்சாட்டு..

மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பிராப்தி எலிசபெத் இப்படி பகீர் புகார் கூறியிருப்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam