தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி நடிகர்களின் காலம் என்பது எல்லா சீசன்களிலும் கிடைக்கும் வாழைப்பழம் போன்றதுதான். எப்போதுமே காமெடி நடிகர்களை வரவேற்க தமிழ் சினிமா தயங்குவதே இல்லை.
அந்த காலத்தில் நாகேஷ், சந்திரபாபு முதல் இன்றுள்ள சந்தானம், யோகி பாபு வரை காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே பொற்காலமாக இருந்து வந்திருக்கிறது.
வடிவேலு
அந்த வகையில், கவுண்டமணி செந்தில் பீரியட் காலத்தில் சினிமாவுக்குள் நுழைந்து, பின் அவர்கள் மார்க்கெட் குறைந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் உச்சாணிக் கொம்பில் ஏறியவர்தான் நடிகர் வடிவேலு.
அவரது டயலாக் டெலிவரியும், உடல் மொழியும், யதார்த்தமான நடிப்பும் மிக எளிதாக ரசிகர்களை அவரது பக்கம் திருப்பி விட்டது. வடிவேலு காமெடி இருந்தால் படம் ஓடிவிடும் என்று சொல்லும் அளவுக்கு வடிவேலு காமெடியில் கொடி கட்டிப் பறந்தார்.
நயன்தாரா
பி வாசு இயக்கிய குசேலன் படத்தில் நயன்தாரா உடை அலங்காரம் செய்யும் காட்சிகளை மறைந்திருந்து பார்க்கும் வடிவேலுவின் கூத்துக்கள் எல்லாம் வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும். அதில் சலூன் கடை சண்முகம் கேரக்டரில் அசத்தியிருப்பார் வடிவேலு.
ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கு இணையாக, சில ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகராக சினிமா தளத்தில் வலம் வந்தார். வடிவேலுவின் ஒரு நாள் சம்பளமாக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை இருந்தது என்பதுதான் உண்மை.
இதையும் படியுங்கள்: பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!
கேப்டன் விஜயகாந்த்
ஆனால் சின்னக்கவுண்டர் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பளித்த கேப்டன் விஜயகாந்தை ஒரு கட்டத்தில் வடிவேலு எதிர்க்க ஆரம்பித்தார். திமுக அரசியல் மேடைகளில் பிரசாரம் பேச வந்த வடிவேலு, கேப்டன் விஜயகாந்த் குறித்து மிகவும் கிண்டலாக, கேலியாக பேசி கலாய்த்தார்.
இதை திமுகவினரே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் விஜயகாந்தை பொருத்த வரை தனி மனிதராக, நடிகராக, நடிகர் சங்க தலைவராக, அரசியல் தலைவராக ஒரு முன் உதாரணமாக இருந்தவர் என்பதால், வடிவேலு பேசியது அவருக்கே வினையாகி, வடிவேலுவை பலரும் வெறுக்க துவங்கினர் என்பதும் ஒரு உண்மைதான்.
இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு இப்போதுதான் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த அவர், இறுதியில் சட்டசபை சபாநாயகராக பதவி ஏற்பதுதான் படத்தில் ஹைலைட்டாக இருந்தது.
இதையும் படியுங்கள்: திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!
சைகை செய்துவிட்டு
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலுவிடம் விஜயகாந்த் குறித்தும் அவருடைய கட்சியின் தற்போதைய நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது
இதனை கேட்டதும் நடிகர் வடிவேலு இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதுபோல சைகை செய்துவிட்டு வேறு ஒரு நிரூபரை காட்டி நீங்கள் ஏதோ கேட்டீர்களே என்றார்.
என்ன கேள்வி கேட்டீங்க
கேள்வியே கேட்காத நிருபரிடம் சொல்லுங்க நீங்க என்ன கேள்வி கேட்டீங்க.. என்று கிண்டலாக பேசியது பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது இதனை பார்த்து ரசிகர்கள் கொதித்து வருகின்றனர்.
இப்படி விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு வடிவேலு கிண்டல் பதில் தந்திருப்பதால் கேப்டன் ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.