தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப நாட்களில் இவர் திரைப்படங்கள் தோல்வியை தழுவியினாலும் பின்னர் நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்.
அது போலவே மதுரையைச் சேர்ந்த வடிவேலு காமெடி நடிகராக திரையுலகில் களம் இறங்கி இன்று வைகை புயல் வடிவேலு என்று அனைவராலும் அன்போடு அழைக்க கூடிய நிலையில் உயர்ந்து இருக்கிறார்.
தளபதி விஜய்..
தளபதி விஜய் சினிமா பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்து திரைத்துறைக்குள் நுழைந்து இன்று தியேட்டர் ஸ்டார் என்று அனைவரோடும் அன்போடு அழைக்க கூடிய வகையில் அதிகளவு வருவாய் கொடுக்கும் நடிகர்களில் முதலாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இதனை அடுத்து இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தளபதி 69 படத்தோடு திரை உலகுக்கு முழுக்குப் போட்டு விட்டு அரசியலில் களம் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய இருப்பதால் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படிங்க: “மற்ற நடிகைகளிடம் காட்டுற வேலையை என்கிட்ட…” உதயநிதி குறித்து ஓப்பனாக பேசியுள்ள நிவேதா பெத்துராஜ்..!
இதனை அடுத்து 2026 ஆவது ஆண்டுக்குப் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறப்போகும் தளபதி விஜயின் வரவை எதிர்பார்த்து ரசிகைகள் காத்திருக்கும் வேளையில் நடிகர் வடிவேலு விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய பேச்சு அதிக பிரசங்கித்தனமாக உள்ளது என கூறலாம்.
விஜயின் அரசியல் பற்றி கிண்டல் அடித்த வடிவேலு..
இதற்குக் காரணம் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் நடிகர் வடிவேலுவுடன் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் வடிவேலு விஜய் அரசியலுக்கு வருகிறாரா? எல்லோரும் வரட்டும். என்னிடம் கேள்வி கேட்டது யார்? நீங்க தானே.. நீங்க சும்மாதான் இருக்கீங்க.. அரசியலுக்கு வாங்க.. கேமராவை பிடித்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்து கேமராவை கையில் ஏன் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்களும் அரசியலுக்கு வாங்க.. எல்லோரும் அரசியலுக்கு வாங்க.. என்று விஜய்யின் அரசியல் வருகையை நக்கல் செய்வது போல் பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வடிவேலு எல்லோரும் வாங்க என்றால் எல்லோரும் வந்தாங்க.. எல்லா நடிகர்களும் கட்சி ஆரம்பித்தார்கள். டி ராஜேந்திரன், கார்த்தி, சரத்குமார் என எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஏன் ராமராஜன் அரசியலுக்கு வந்தார். பாக்யராஜ் அரசியலுக்கு வந்தார். சிவாஜி கணேசன் அரசியலுக்கு வந்தார். எல்லோரும் நல்லது செய்யத்தானே அரசுகளுக்கு வந்தார்கள் என அரசியலில் ஜெயிக்காத நடிகர்களின் பெயரை மட்டும் குறிப்பிட்டு நடிகர் வடிவேலு பேசி இருக்கிறார்.
கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்..
இப்படி அவர் பேசிய போது அவர் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார் முதலமைச்சராக வரவில்லையா? அது போல விஜயிக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று விஜய்க்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக பத்தாம் பொதுவாக எதிர்மறையான எண்ணத்தில் பேசி இருக்கிறார் என நடிகர் வடிவேலுவை கடுமையாக விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.
இதனை அடுத்து விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து வடிவேலு கொடுத்த கிண்டலான பதிலை கேட்டு தற்போது ரசிகர்கள் அனைவரும் கடுப்பில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!
ஏற்கனவே செகண்ட் இன்னிங்ஸில் களம் இறங்கிய வடிவேலு போதிய வெற்றியை பெற முடியாத நிலையில் இது போன்ற பேச்சுக்களால் விபரீத நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதை கூட உணராமல் உளறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஏழரை தானாக இழுத்துக் கொண்டார் என்பது போல பேசி வருகிறார்கள்.