தேங்காய் பால் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.

தேங்காய் எண்ணெய்யை தலைமுடி மற்றும் சருமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேய்க்க பயன்படுத்துகிறோம். அவ்வாறு தலையில் தேய்க்கும் போது அதிகப்படியான எண்ணெய் முகத்தில் வழிவதால் முகம் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் ,களைப்பாகவும் தோற்றமளிக்கும். 

இதை நிவர்த்திக்கும் வகையில் தேங்காய் எண்ணைக்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் தலைமுடிக்கும், சருமத்துக்கும் கிடைக்கிறது

 

தேங்காய் எண்ணெய்யை போலவே தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. 

ஆக்சிஜன் நிறைந்த தேங்காய் பால்

தேங்காய் பாலில் போதுமான அளவு தேங்காய் பால் இல்லாத போதிலும் தேங்காய் பால் நிறைந்துள்ளது. போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால் பலருக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இரத்த சோகை உண்டாகிறது. 

ஒரு கப் தேங்காய் பாலில் உடம்புக்கு தேவையான  இரும்புச் சத்தில் 25 சதவீதத்தை அளிப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது.

 வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை நரம்புகளில் ஏற்படும் இருகத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலம் ஏற்படும். 

உடல் எடையை குறைக்க முற்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தேங்காய் பாலை குடித்து வந்தால் பசியை அடக்கும் தன்மை இந்த தேங்காய் பாலில் உள்ளது. 

தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிக அளவு நார்ச்சத்து உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. 

அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க தேங்காய் பால் உதவி புரிகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை ஏற்படுத்தும்.

 

 செலினியம் எனும் வேதிப்பொருள் தேங்காய் பாலில் அதிகளவு உள்ளது. இதனால் கீல்வாத பிரச்சனை குறைகிறது. 

முடி பளபளப்பாக வைக்க உதவுகிறது. இந்த தேங்காய் பாலை தலைமுடியில் தடவுவதன் மூலம் முடி பளபளப்பாகவும் அதன் வேர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.  முடி உதிர்தல் கட்டுப்பட்டு பட்டுப் போன்ற முடி எல்லோருக்கும் கிடைக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …