தப்பாளம் குழம்பு.

இன்னும் கிராமப்புறங்களில் மிக நேர்த்தியான முறைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மிகச்சிறந்த உணவுகளை சமைத்து உண்டு வருவதால் தான் அவர்கள் வேலைகளையும் கடுமையாக செய்யமுடிகிறது நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட கிராமப்புறத்தில் சமைக்கக் கூடிய மிக முக்கியமான சுவைமிகுந்த தப்பாளம் குழம்பு பற்றி பார்க்கலாம்.

 அது என்ன தப்பாளம் குழம்பு என்று நீங்கள் யோசிப்பது எனக்கு தெரிகிறது. உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இந்த குழம்பை செய்து கொடுத்து  அசத்த என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

  1. வாழைக்காய் 1
  2. கத்தரிக்காய் 6
  3. முருங்கைக்காய் 2
  4. கீரைத்தண்டு 1 
  5. மொச்சைக்கொட்டை அரை கப் மாங்காய் ஒன்று 
  6. தேங்காய் அரை மூடி
  7.  கூட்டு தூள் 4 தேக்கரண்டி
  8.  புளி 
  9. பூண்டு 
  10. வரமிளகாய்
  11. பெரிய வெங்காயம் 
  12. தக்காளி தேவைக்கேற்ப

முதலில் மேற்கூறிய காய்களை துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மொச்சை கொட்டையை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை பல் பல்லாக சிறிதாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மேற்கூறிய காய்களை உப்பு சேர்த்து வேக வைக்கவ தண்ணீரை ஊற்றவேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, தக்காளி, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றவும். 

அத்துடன் தேங்காய், மாங்காய் அரைத்துப் போடலாம் நன்றாக கொதி வந்ததும் இறக்கி விடவும்.

தப்பாளம் குழம்பு ரெடி.சாதத்தோடு ஒரு பிடி பிடிக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …