நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன், தன் சினிமா நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அரசியலில் முழுமையாக ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
பெரும்பாலும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு போகும் நடிகர், நடிகையர் சினிமாவில் போதிய வாய்ப்பின்றி மார்க்கெட் இழந்த நிலையில்தான் எம்பி, எம்எல்ஏ பதவிகளுக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு முக்கிய கட்சியில் சேருவர். அல்லது புதிய கட்சி ஆரம்பித்து, பரபரப்பை ஏற்படுத்துவர்.
எம்ஜிஆர் விஜயகாந்த்
ஆனால் அப்படி புதிய கட்சி துவங்கியவர்களில் எம்ஜிஆர், விஜயகாந்த் என்ற இருவர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றனர். சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி ராஜேந்தர், நவரச நாயகன் கார்த்திக், சரத்குமார் போன்றவர்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
விஜய்
தற்போது விஜய், தமிழ் சினிமாவில் நெம்பர் ஒன் பொசிஷனில் இருந்தும், அரசியலுக்கு வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இப்போது நிலவரப்படி ஒரு படத்துக்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ விஜய் ஒருவர் மட்டுமே.
தமிழக வெற்றிக்கழகம்
கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்ட விஜய், கட்சி பெயரை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் விஷயத்தை தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை தெளிவுபடுத்திய விஜய், எங்கள் இலக்கு 2026 சட்டசபை தேர்தல்தான் என்பதையும் விளக்கமாக கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: அந்த ஹீரோயின் மேல கண்ணு வச்ச இயக்குனர்.. இதுவும் போச்சா… புலம்பும் நடிகை
நல்ல வரவேற்பு
நடிகர் விஜய்க்கு அரசியலில் நல்ல வரவேற்பு இருப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தெரிகின்றன. குறிப்பாக சில தினங்களுக்கு முன் அவர், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக, கட்சி உறுப்பினராக பதிவு செய்துக்கொள்ள அறிவுறுத்தினார்.
அதுவும் விருப்பம் இருந்தால் மட்டுமே, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுங்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஆனால் சில மணி நேரங்களில் பல லட்சம் பேர் அந்த செயலியில் உறுப்பினராக பதிவு செய்ய முயற்சித்ததால் அந்த செயலியே ஸ்தம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், விஜய் கட்சியில் இணைந்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மதுரையில் மாநாடு
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் பெயரை மட்டுமே அறிவித்துள்ள விஜய், அடுத்த மாதம்தான் கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கிறார்.
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்கள் என எதுவுமே அறிவிக்கப்படாத நிலையிலேயே தமிழக மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு விஜய்க்கு கிடைக்கிறது என்றால், இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் நேரத்தில் அவரது செல்வாக்கு வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்:இந்த நடிகைகளுக்கு அது என்னை விட பெருசு.. இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்ல.. ரம்யா கிருஷ்ணன் ஒரே போடு..
போட்டியிடும் தொகுதி
இந்நிலையில் விஜய் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் தன்னுடைய தந்தையின் பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.
விஜய்யின் பூர்வீகமாக
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சி மடம் என்ற கிராமத்தில் பிறந்தவர். நடிகர் விஜய்யின் பூர்வீகமாக இந்த ராமநாதபுரம் இருக்கின்றது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்திருக்கிறார் நடிகர் விஜய் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இதுவரை நடிகர் விஜய் இந்த தொகுதியில் தான் போட்டியிடுவார் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் அந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடவுள்ள தொகுதி ராமநாதபுரம் தான் என்றால், அது தான் பூர்வீக பாசம் என்பதை உறுதியாக சொல்லி விடலாம்.