தல அஜித்துக்கு சொந்தமாக மகள் இருப்பதைவிட திரையில் அவரது மகளாக அனைவருக்கும் தெரியும் அளவுக்கு அஜீத்துடன் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா.
அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.
தற்போது நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா. அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனிகா-வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.
ஆனால் அனிகாவோ நான் ஒன்றும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. பெரிய பொண்ணு ஆகிட்டேன்.. என கூறுவது போல புடவை சகிதமாக போஸ் கொடுத்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.