நடிகர் சமுத்திரக்கனி இயக்குனர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், டப்பிங் கலைஞர் மற்றும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.
அவர் 1997 இல் இயக்குனர் சுந்தர் கே. விஜயனிடம் உதவியாளராக இருந்தார். மேலும் அவர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார் .
இதையும் படியுங்கள்: 45 வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரள வைக்கும் நடிகை மஞ்சு வாரியர்..!
சமுத்திரக்கனி 2000 காலகட்டத்தில் சினிமாவில் இறங்கி உன்னை சரணடைந்தேன்,நாடோடிகள், அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதுதவிர பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா வளம் குறித்து பேசிய சமுத்திரகனி, அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்யத்தான் போராடியது எங்குதான் தெரியும்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்காங்களோ இல்லையோ தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முதலில் தயாராக இல்லை.
இதையும் படியுங்கள்: முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!
ஆனால், அதே அளவுக்கு சிறிய பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளியான “மஞ்சுமெல் பாய்ஸ்” இங்கே ஓஹோன்னு ஓடுது. ஆனால், என்னுடைய படத்தை கூட வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை.
அவ்வளவு ஏன் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை நான்கு முறை பார்த்து விட்டான். மலையாளத்தில் வசூலிப்பதை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை அந்த படம் ஈட்டி உள்ளது.
இதற்காக தான் நான் படம் இயக்குவதை விட்டுவிட்டு யார் நடிக்க கூப்பிடுகின்றனரோ அந்த படத்தில் நடித்துவிட்டு வருகிறேன்.
இதையும் படியுங்கள்: வெங்கட்பிரபு சில்றத்தனம்.. Good Bad Ugly பட போஸ்டர்.. கழுவி ஊத்தும் AK ரசிகர்கள்..!
எனவே பிற மொழிகளை போன்றே தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறு படங்களையும் ரசிகர்கள் கொண்டாடினால் பல நல்ல கதைகள் சினிமாவாக வரும் என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள யாவரும் வல்லவரே திரைப்படம் மார்ச் 15-ஆம் தேதி இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.