சந்திரபாபு, ஜெமினி கணேசன் மோதல்.. இப்படியெல்லாமா நடந்திருக்கு.. இதனால் தான் மார்கெட் இழந்தாரா..?

நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவில் கருப்பு, வெள்ளை படங்கள் வந்த காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர்.

சந்திரபாபு

சினிமா நடிகர்களிலேயே சந்திரபாபு போல ஷோக்கு பேர்வழி யாரும் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு பாரின் வாழ்க்கை வாழ்ந்த ஒரு நடிகர்.

அப்போதே வெளிநாட்டு சொகுசு காரில்தான் வலம் வருவார். மிகவும் உயர்தரமான பிராண்டட் பேண்ட், சர்ட்டுகளை தான் அணிவார். பெல்ட், கூலிங் கிளாஸ், வாட்ச், ஷூ, பாரின் சென்ட், பாடி ஸ்பிரே என அவர் அணிகிற அணிகலன்கள், பயன்படுத்துகிற வாசனை திரவியங்கள் எல்லாமே, வெளிநாட்டு இறக்குமதிதான். பிராண்டட் சிகரட் டப்பா எப்போதுமே கையில் இருக்கும்.

அதிக சம்பளம்

அதுமட்டுமல்ல, எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தருகிறத சம்பளத்தை விட ஒரு ரூபாய் எனக்கு அதிகமாக தர வேண்டும் என்று சொல்லிதான் தயாரிப்பாளரிடம் நடிக்கவே சம்மதிப்பது சந்திரபாபுவின் ஸ்டைல்.

இதையும் படியுங்கள்: கண்ணு கூசுதே.. குளியல் தொட்டியில்.. பளபளக்கும் வெள்ளி உடையில் பிரபல நடிகை பாவனா..

ஆனால் சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கை நிறைய சோகங்கள் நிறைந்தது. அவர் திருமணம் செய்த மனைவி, தனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும் அவருடன் வாழவே விரும்புவதாகவும் கூற, அந்த காதலனுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு அந்த கதையை தான் கே. பாக்யராஜ் ‘அந்த 7 நாட்கள்’ படமாக எடுத்ததாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

ஓபன் ஸ்டேட்மென்ட்

சந்திரபாபுவிடம் உள்ள ஒரு குணம், யாரையும் வைத்து பார்த்து யோசித்து மரியாதையாக பேச மாட்டார். மனதில் தோன்றுவதை அப்படியே வெளிப்படையாக பேசி விடுவார். இதை தான் ஓபன் ஸ்டேட்மென்ட் என்று இப்போது கூறுகின்றனர்.

நடிகர் ஜெமினி கணேசன் குறித்து ஒருமுறை சந்திரபாபு கூறுகையில், அவன் என்னோட ஆதிகால நண்பன். திருவல்லிக்கேணியில் குப்புமுத்து முதலி தெருவில் ஒரு மாடியில் குடியிருந்தேன். அப்போ அவன் தாய் உள்ளம் என்கிற படத்தில் நடிச்சிக்கிட்டு இருந்தான்.

இதையும் படியுங்கள்: மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் நடிகர் விஜய்.. அதுவும் எந்த ஊர்ல தெரியுமா..? உங்கள் கருத்து என்ன..?

வட்டி கடை நடத்துனியா

அவனுக்கு காமெடி சீன், லவ் சீன் எல்லாம் எப்படி பண்ணலாமுன்னு நான்தான் நடித்து காட்டினேன். அப்புறம் இத்தனை வருஷமாகியும் நடிப்புல ஒண்ணுமே இல்லையேடா அம்பி, போன ஜென்மத்துல வட்டி கடை நடத்துனியா, என ஜெமினியிடம் நேரடியாகவே கிண்டலாகவும் பேசி இருக்கிறார் சந்திரபாபு.

அதே போல் சிவாஜி குறித்தும், எம்ஜிஆர் குறித்தும் பல இடங்களில் கிண்டலாக பேசியிருக்கிறார் நடிகர் சந்திரபாபு.

அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த அவர்களை பற்றி, பொது இடங்களில் பல பேர் முன்னிலையில் நக்கலாக பேசியதன் விளைவாக, அவர்களது பல வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் நடிகர் சந்திரபாபு.

மார்க்கெட் இழந்து..

சந்திரபாபு, ஜெமினி கணேசன் மோதல்.. எம்ஜிஆர், சிவாஜியை கிண்டல் செய்தல் என இப்படியெல்லாம் நடந்ததால்தான் சந்திரபாபு ஒரு கட்டத்தில் மார்கெட் இழந்து, மிகவும் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

சந்திரபாபு ஒரு மிகச்சிறந்த கலைஞர், பாடகர். அவர் மட்டும் தன் நடிப்பில் முழு கவனம் செலுத்தியிருந்தால், அவர் பல உச்சங்களை தொட்டிருக்க முடியும். ஆனால் அவரது ஆணவம், தலைக்கணம் காரணமாக அவரது வீழ்ச்சிக்கு அவரே காரணமானார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam