நான் வேணும்ன்னு அடம் பிடித்தார்.. பிரபலம் குறித்து மேடையிலேயே கூறிய நடிகை ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு நடிகையாக ஆண்ட்ரியா இருந்து வருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆண்ட்ரியா, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து விஸ்வரூபம், அரண்மனை 2, காஞ்சனா 2, ஆயிரத்தில் ஒருவன், தரமணில மங்காத்தா, உத்தமவில்லன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவை பொருத்த வரை அவர் நடித்த படங்களில் சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், சரத்குமார் மனைவியாக அவரது நடிப்பு, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி படங்களில் திறன்பட்ட நடிப்பால் ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தார்.

வடசென்னை படத்தில் அமீர் மனைவியாக நடித்ததும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படத்தில், தன் கணவரை கொன்ற கூட்டாளிகளை பழிவாங்கும் கேரக்டரில் வெற்றிமாறன், ஆண்ட்ரியாவை நடிக்க வைத்திருப்பார். இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில், ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சிறந்த பாடகி

ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகி என்பது பலருக்கும் தெரியாது. அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் காக்க காக்க, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா தான்.

இதையும் படியுங்கள்: உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

அதுமட்டுமின்றி, ஆண்ட்ரியா சிறந்த டப்பிங் கலைஞர். கமலினி முகர்ஜி (வேட்டையாடு விளையாடு), இலியானா ( நண்பன்) டாப்சி ( ஆடுகளம்) போன்ற நாயகிகளுக்கு அந்த படங்களில் பின்னணி குரலில் பேசியவர் வேறு யாருமல்ல, ஆண்ட்ரியா தான்.

இப்போதும் வெளிநாடுகளில் யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்களால் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார் ஆண்ட்ரியா.

இசை வெளியீட்டு விழா

மிக விரைவில் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்த கா என்ற படம், ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னனையில் நடந்தது. இந்த படத்தில் நடித்த ஆண்ட்ரியா, இந்த விழாவில் பங்கேற்று பேசினார்.

இதையும் படியுங்கள்: சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

மேடையில் பேசிய அவர், இந்த படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் நாஞ்சில் இந்த படத்தை உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் அப்பாவாகவும், டைரக்டர் அம்மாவாகவும் இருந்து இந்த குழந்தையை வளர்ந்திருக்கின்றனர். அவர்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த படம் வளர்ந்திருக்காது.

நான்தான் வேனும்ன்னு அடம் பிடித்தார்

சில இயக்குநர்கள், தங்களது படத்தில் நடிக்க கதாநாயகியை தேர்வு செய்வர். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டால் வேறு ஒருவரை நடிக்க வைத்து விடுவர். ஆனால் நாஞ்சில் அப்படி செய்யாமல், இந்த படத்தில் ஆண்ட்ரியாதான் வேண்டும் என அடம் பிடித்தார், என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நான் வேணும்ன்னு அடம் பிடித்தார் என படத்தின் டைரக்டர் குறித்து மேடையிலேயே நடிகை ஆண்ட்ரியா கூறியது, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam